Published : 08 Nov 2020 03:11 AM
Last Updated : 08 Nov 2020 03:11 AM

இறுதிப்போட்டியில் மும்பையுடன் மோதுவது யார்?- டெல்லி – ஹைதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐக்கியஅரபு அமீரகத்தில் நடை பெற்று வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பிளேஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ்ஹைதராபாத் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி 2-வது தகுதி சுற்று ஆட்டத்துக்கு முன்னேறியது.

இந்நிலையில் அபுதாபியில் இன்று இரவு நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் டெல்லி – ஹைதராபாத் அணி
கள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி வரும் 10-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை அணியுடன் பட்டம்
வெல்ல மல்லுக்கட்டும்.

டேவிட் வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி சரியான தருணத்தில்உயர்மட்ட நிலையை எட்டியுள்ளது. இந்த சீசனில் டெல்லி அணிக்கு எதிராக லீக் சுற்றில் மோதிய 2 ஆட்டத்திலும் ஹைதராபாத் அணிவெற்றியை பதிவு செய்திருந்தது. தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த டெல்லி அணிக்குமுதல் தோல்வியை ஹைதராபாத் அணிதான் கொடுத்திருந்தது. மற்றொரு ஆட்டத்தில் டேவிட் வார்னரும், ரித்திமான் சாஹாவும் சிறந்த திறனை வெளிப்படுத்தி வெற்றிக்கு பங்களிப்பு செய்திருந்தனர்.

மேலும் எலிமினேட்டர் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தங்களது அனுபவத்தால் அபாரமாக விளையாடி வெற்றியை தேடிக் கொடுத்தது அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இவர்களுடன் மணீஷ் பாண்டேவும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிகரிக்கும்.

பந்து வீச்சை பொறுத்த வரையில் ஜேசன் ஹோல்டர், சந்தீப் சர்மா, நடராஜன், ரஷீத் கான் ஆகியோர் அசுரபலம் சேர்க்கின்றனர். இன்றைய ஆட்டத்தில் இந்த பந்து வீச்சு கூட்டணிடெல்லி பேட்டிங் வரிசையை தொந்தரவு செய்யக் கூடும்.

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியானது கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில் 5-ல் தோல்விஅடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது. தொடக்க ஆட்டங்களில் அபாரமாக செயல்பட்ட நிலையில் தற்போது திடீரென அந்த அணி
பேட்டிங் மற்றும் பந்து வீச்சில்கடும் தேக்கத்தை சந்தித்துள்ளது.

மும்பைஅணிக்கு எதிரான முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் அஸ்வின், அக்சர் படேல் மட்டுமே சிறப்பாக பந்து வீசினர். அதிலும் அஸ்வின் இரு முறை திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்த போதிலும் மற்ற பந்து வீச்சாளர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறினர். அசுர வேகத்தில் வீசும் ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் கூட தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். இதனால் பந்து வீச்சில் அந்த அணி கூடுதல் கவனம் செலுத்தக் கூடும்.

பேட்டிங்கில் பிரித்வி ஷா தொடர்ச்சியாக ஏமாற்றம் அளித்து வருகிறார். 2 சதங்கள் விளாசிய ஷிகர் தவணிடம்இருந்து அதன் பின்னர் பெரியஅளவிலான ஆட்டம் வெளிப்படவில்லை. இன்றைய ஆட்டத்தில்டெல்லி அணி வெற்றி பெறவேண்டுமானால் தொடக்க ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இவர்களுடன் ஸ்ரேயஸ் ஐயர், அஜிங்க்ய ரஹானே, ஸ்டானிஸ்.
ரிஷப் பந்த் ஆகியோரும் பேட்டிங்கில் எழுச்சி பெற வேண்டும்.

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x