

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை அணி 2 - 0 என்ற கோல் கணக்கில் கோவா வை வீழ்த்தியது.
நேற்று நடந்த லீக் போட் டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் கோவா அணியும், கடைசி இடத்தில் இருந்த மும்பை சிட்டி அணியும் மோதின. இப்போட்டியில் வலுவான கோவா அணிக்கு எதிராக மிகச் சிறப்பான ஆட்டத்தை மும்பை வெளிப்படுத்தியது.
மும்பை வீரர்களான செட்ரி 33-வது நிமிடத்திலும், பிகியோன் 48-வது நிமிடத்திலும் கோல்களை அடித்து கோவாவுக்கு அதிர்ச்சி யை அளித்தனர்.
இதிலிருந்து கோவா அணியால் மீள முடிய வில்லை. இதைத் தொடர்ந்து இப்போட்டியில் மும்பை அணி 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.