ஷாங்காய் டென்னிஸில் நடாலை வீழ்த்தினார் சோங்கா

ஷாங்காய் டென்னிஸில் நடாலை வீழ்த்தினார் சோங்கா
Updated on
1 min read

ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் 8ம் நிலை வீரரான ஸ்பெயின் ரபேல் நடால் 4-6, 6-0, 5-7 என்ற செட் கணக்கில் போராடி 16ம் நிலை வீரரான பிரான்சின் சோங்காவிடம் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெற்றது.

மற்றொரு அரையிறுதியில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிக், 3ம் நிலை வீரரான இங்கிலாந்தின் ஆண்டிமுர்ரேவை 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். இன்று நடைபெறும் பைனலில் ஜோகோவிக்-சோங்கா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

ஹாங்காங் ஒபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜெலீனா ஜன்கோவிக் 6-4, 7-5 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸையும், ஜெர்மனியின் ஏஞ்சலிக்ஹெர்பர் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் ஆஸி.யின் சமந்தா ஸ்டோஸரையும் தோற்கடித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in