Last Updated : 06 Nov, 2020 03:16 AM

 

Published : 06 Nov 2020 03:16 AM
Last Updated : 06 Nov 2020 03:16 AM

விளையாட்டாய் சில கதைகள்: கடன் வாங்கி உருவான விளையாட்டு

அமெரிக்காவின் ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரியில் கூடைப்பந்து விளையாட்டை ஜேம்ஸ் நைஸ்மித் அறிமுகப்படுத்திய காலகட்டத்தில், அங்கு மாணவராக இருந்தார் வில்லியம் ஜி.மோர்கன். பின்னர் அதே கல்லூரியில் இவர் விளையாட்டுத் துறை ஆசிரியராக சேர்ந்ததும், தன் ஆசிரியரின் வழியில் புதிதாக ஓர் ஆட்டத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்படி நீண்ட ஆராய்ச்சிக்கு பிறகு அவர் கண்டுபிடித்த விளையாட்டுதான் வாலிபால். கூடைப்பந்து விளையாட்டில் பயன்படுத்தும் பந்து, டென்னிஸ் போட்டிகளில் பயன்படுத்தும் வலை, கைப்பந்து விளையாட்டில் இருந்து கைகளைப் பயன்படுத்தும் முறை என பல விளையாட்டுகளில் இருந்து சிற்சில விஷயங்களை கடன்வாங்கி, அவற்றை ஒன்றாக கலந்து 1895-ம் ஆண்டில் வாலிபால் விளையாட்டை அவர் உருவாக்கினார்.

ஆரம்பத்தில் ‘மிண்டோனெட்’ என்று பெயரிடப்பட்ட இந்த விளையாட்டு, மிகக்குறைந்த நாட்களிலேயே கல்லூரி மாணவர்களிடமும், ஒய்எம்சிஏ அங்கத் தினரிடமும் பிரபலமடைந்தது. பின்னாளில் ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியரான டாக்டர். ஆல்பிரட் ஹல்ஸ்டெட், இவ்விளையாட்டுக்கு ‘வாலிபால்’ என்று பெயரிட்டார்.

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளில் மட்டுமே ஆடப்பட்டு வந்த வாலிபால், 1913-ம் ஆண்டில் ஆசியாவுக்குள் அடியெடுத்து வைத்தது. தொடக்கத்தில் இங்கு நடந்த வாலிபால் போட்டிகளில் ஒவ்வொரு அணியிலும் தலா 16 வீரர்கள் இடம்பெற்றனர். 1916-ம் ஆண்டில் வாலிபால் விளையாட்டுக்கென விதிகள் வகுக்கப்பட்டன. திருத்தப்பட்ட விதிகளின் கீழ் வாலிபால் விளையாட்டில் ஒவ்வொரு அணியும் 6 வீரர்களைக் கொண்டிருக்கலாம். இதில் 3 வீரர்கள் முன்வரிசையிலும், 3 வீரர்கள் பின்வரிசையிலும் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆட்டத்தின்போது வெளியில் உள்ள உபரி வீரர்களை மாற்று வீரர்களாக களத்தில் இறக்கலாம். வாலிபால் போட்டிகள் 3 செட்களைக் கொண்டதாக இருக்கும். முதல் 2 செட்களில் 25 புள்ளிகளை முதலில் எட்டும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x