விளையாட்டுச் செய்தித் துளிகள்...

விளையாட்டுச் செய்தித் துளிகள்...
Updated on
1 min read

ஐபிஎல் கிரிக்கெட்: கோல்ட்டருக்குப் பதில் தாஹிர்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகிய டெல்லி டேர்டெவில்ஸ் வேகப்பந்து வீச்சாளரும், ஆஸ்திரேலிய வீரருமான நாதன் கோல்ட்டருக்குப் பதில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21-ம் தேதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய போது கோல்ட்டர் நீலுக்கு தசைநார் முறிவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகினார்.

ஐபிஎல் தகுதிச்சுற்று: இடமாற்றம்

மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 30-ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 2-வது தகுதிச்சுற்று மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இறுதி ஆட்டமும் வான்கடேவில் நடைபெறவிருப்பதால் மைதானத்தை பராமரிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு 2-வது தகுதிச்சுற்று ஆட்டம் பிரபோர்ன் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஐபிஎல் தலைவர் ரஞ்ஜிப் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்தை வீழ்த்தியது இலங்கை

அயர்லாந்தின் துல்பின் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இலங்கை.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குலசேகரா ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக சன்டிமல் 39, பிரியாஞ்சன் 31, கேப்டன் மேத்யூஸ் 30 ரன்கள் எடுத்தனர்.

இதன்பிறகு பேட் செய்த அயர்லாந்து அணி, இலங்கையின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 39.5 ஓவர்களில் 140 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்ச மாக கேப்டன் போர்ட்டர்பீல்ட் 37, ஓபிரையன் 33 ரன்கள் எடுத்தனர்.

இலங்கைத் தரப்பில் சுரங்கா லக்மல், அஜந்தா மென்டிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், குலசேகரா 2 விக்கெட்டு களையும் வீழ்த்தினர். மென்டிஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இலங்கை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 2-வது போட்டி இன்று நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in