கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் மே.இ.தீவுகளின் மர்லன் சாமுயேல்ஸ்

கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் மே.இ.தீவுகளின் மர்லன் சாமுயேல்ஸ்
Updated on
1 min read

மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர் மர்லன் சாமுயயேல்ஸ் தொழில்பூர்வ கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார். கடைசியாக 2018-ல் இவர் விளையாடினார்.

அதிரடி வீரரான மர்லன் சாமுயேல்ஸுக்கு வயது 39. இவர் 71 டெஸ்ட் போட்டிகள், 207 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 67 டி20 சர்வதேசப் போட்டிகளில் மே.இ.தீவுகளுக்காக ஆடியுள்ளார். மூன்று வடிவங்களிலும் 11,000 ரன்களைக் குவித்த சாமுயேல்ஸ் 150 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

சாமுயேல்ஸ் என்றால் நினைவுக்கு வருவது ரசிகர்களைப் பொறுத்தவரை இரண்டு டி20 உலகக்கோப்பை சாம்பியன் பட்ட இறுதிப் போட்டிகள்தான். 2012-ல் மே.இ.தீவுகள் கோப்பையை வென்ற போது சாமுயேல்ஸ் 56 பந்துகளில் 78 ரன்கள் விளாசினார். இது இலங்கைக்கு எதிராக.

4 ஆண்டுகள் சென்று இங்கிலாந்துக்கு எதிராக இன்னும் கொடூரமான தாக்குதல் ஆட்டத்தில் இறுதிப் போட்டியில் 85 ரன்களை விளாசினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் புனே வாரியர்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ், பிபிஎல் தொடரில் மெல்போர்ன் ரெனகேட்ஸ், பாகிஸ்தானில் பெஷாவர் ஜால்மி ஆகிய அணிகளிலும் ஆடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 260 ஆகும். 7 சதங்கள் 24 அரைசதங்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் 133 நாட் அவுட். 10 சதங்கள், 30 அரைசதங்கள் 118 சிக்சர்கள் விளாசியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 10 அரைசதங்களை விளாசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in