ஹோட்டல் அறையில் ஆர்சிபி-யின் பலம் பலவீனங்களை ‘ஸ்கேன்’ செய்த ஷ்ரேயஸ் அய்யர்

ரிக்கி பாண்டிங், அய்யர்.
ரிக்கி பாண்டிங், அய்யர்.
Updated on
1 min read

அஸ்வின், நார்ட்யே, ரபாடா, அக்சர் படேலின் பந்து வீச்சினால் நேற்று ஆர்சிபி-யை முடக்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 152க்கு மட்டுப்படுத்தி பிறகு ஷிகர் தவண் (54) , ரஹானே (60) ஆகியோரது அரைசதங்களினால் எளிதில் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.

படிக்கால், விராட் கோலி சேர்ந்து 57 ரன்களை 2வது விக்கெட்டுக்குச் சேர்த்தாலும் டெல்லி அணி இவர்களைக் கட்டிப்போட்டது. 57 ரன்களை எடுக்க 50 பந்துகள் தேவைப்பட்டது. கோலியை அஸ்வின் அற்புதமாக வீழ்த்தினார்.

இந்நிலையில் ஷ்ரேயஸ் அய்யர் கூறியதாவது:

வாழ்வா சாவா போட்டி என்பது தெரியும். அதனால்தான் வெற்றியில் மட்டும் கவனம் செலுத்தினோம் நெட் ரன் ரேட்டில் அல்ல. தொடரின் பிற்பாதியில் வென்ற அணிகள் மொத்தமாக காட்சியையே மாற்றி விட்டனர்.

இந்த ஐபிஎல் தொடர் உண்மையில் போட்டாப் போட்டி நிரம்பியதாக உள்ளது. பவுலர்கள் திட்டமிட்டபடி வீசினர். எதிரணியினரின் பலம், பலவீனங்களை ஹோட்டல் அறையில் அலசினோம். அதற்கு பலன் கிடைத்தது.

மும்பை இந்தத் தொடரின் பிரமாதமான அணியாகத் திகழ்கிறது. அனைத்தையும் எளிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் அவர்களுக்கு எதிராக அணிக்கூட்டத்திலும் இதைத்தான் விவாதித்தோம். அடிப்படைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மற்றது சுலபமாக அமையும்.

இவ்வாறு கூறினார் ஷ்ரேயஸ் அய்யர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in