

ஐபிஎல் அரங்கில் அதிக கேட்ச்கள் பிடித்த விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக், எம்.எஸ்.தோனியை முந்தினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா அன்று வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பில் உள்ளது, இன்று நடைபெறும் மும்பை இந்தியன்ஸ், சன் ரைசர்ஸ் போட்டியின் வெற்ரி தோல்வி கொல்கத்தாவின் விதியைத் தீர்மானிக்கும். இந்நிலையில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் அசத்தினார்.
கேட்சஸ் வின் மேட்சஸ் என்ற பழமொழிக்கு ஏற்பட் தினேஷ் கார்த்திக் 4 கேட்ச்களை அள்ளினார். இதில் பென் ஸ்டோக்ஸுக்கு கமின்ஸ் பந்தில் இடது புறம் பாய்ந்து ஒரு கையில் பிடித்த கேட்ச் அற்புதத்தின் ரகம். இது அவரது 110-வது கேட்ச்.
204 போட்டிகளில் தோனி 109 கேட்ச்களைப் பிடிக்க தினேஷ் கார்த்திக் 196 போட்டிகளில் 110 கேட்ச்களை அள்ளி சாதனை படைத்துள்ளார்.
ஆனால் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த காரணமான விக்கெட் கீப்பர் பட்டியலில் தோனி 148 விக்கெட் வீழ்ச்சியுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். தினேஷ் கார்த்திக் 110 கேட்ச் 30 ஸ்டெம்பிங் 140 விக்கெட் வீழ்ச்சி என்று 2ம் இடத்தில் உள்ளார்.
66 கேட்ச்களுடம் பார்த்திவ் படேல் 3ம் இடத்திலும் நமன் ஓஜா 65 கேட்ச்களுடன் 4ம் இடத்திலும் ராபின் உத்தப்பா 58 கேட்ச்களுடன் 5ம் இடத்தில் உள்ளார்.