

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 சிக்சர்களை விளாசிய மும்பை இடது கை பேட்ஸ்மென் இஷான் கிஷன் டி20-யில் தன் 100வது சிக்சரை அடித்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 9 விக்கெட்டுகளில் நொறுக்கியது. இந்த ஆட்டத்தில் 47 பந்துகளில் 72 ரன்கள் என்று டெல்லி பந்து வீச்சை பிரித்து மேய்ந்தார் இஷான் கிஷன்.
இதுவரை 87 டி20 போட்டிகளில் இஷான் கிஷன் 102 சிக்சர்களை அடித்துள்ளார்.
தனது சாதனை குறித்து இஷான் கிஷன் கூறும்போது, “எனது சிக்சர் சாதனைகளுக்குரிய பெருமை என் தாயாருக்குத்தான் போய்ச் சேர வேண்டும்.
ஏனெனில் அவர்தான் எனக்கு சத்தான உணவுகளைக் கொடுத்து வளர்த்தார், எனக்கே கூட சில வேளைகளில் எப்படி இப்படி நீண்ட் தூர சிக்சர்களை அடிக்க முடிகிற்து என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது. அதே வேளையில் பயிற்சியில் சிக்சர்களை அடித்துப் பழகியதும் காரணம், அதில்தான் வெற்றி அடங்கியுள்ளது.
தொடர்ந்து இப்படியே ஆடி சிக்சர்களை விளாச விரும்புகிறேன்.” என்றார் இஷான் கிஷன்.
இஷான் கிஷன் இதுவரை 11 போட்டிகளில் இந்த ஐபிஎல் தொடரில் 395 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 99. சராசரி 49.37, ஸ்ட்ரைக் ரேட் 144.