Published : 02 Nov 2020 08:43 AM
Last Updated : 02 Nov 2020 08:43 AM

10 ஆண்டுகள் சிறப்பாக ஆடினோம்.. இனி அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியதுதான்: தோனி சூசகம்

கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தி தன்னுடன் இந்தியாவுக்கு டிக்கெட் போட வைத்த சிஎஸ்கே அணி அடுத்த தலைமுறை வீரர்களுக்கு மாற வாய்ப்பிருப்பதாக கேப்டன் தோனி தெரிவித்தார்.

ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் ஒரு அரைசதம் அடித்து தொடர்ச்சியாக 3 அரைசதங்களை அடித்த முதல் சிஎஸ்கே வீரர் ஆனார். இதோடு இந்த ஸ்பார்க் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று தோனியிடம் தன் பேட்டிங் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் தான் அடுத்த ஐபிஎல் தொடரிலும் ஆடுவேன் என்பதை உறுதியாகத் தெரிவித்து தன் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளார் தோனி. 14 புள்ளிகளுக்கு 2 புள்ளிகள் குறைவு, 14 எடுத்திருந்தால் தகுதி பெற்றிருப்போம் என்கிறார் தோனி.

இந்நிலையில் இந்த சீசனை முடித்து பேட்டியளித்த தோனி கூறியதாவது:

மிகவும் கடினமான தொடர். நிறைய தவறுகளைச் செய்தோம். கடைசி 4 ஆட்டங்கள்தான் ‘மாதிரி’ இப்படி ஆடத்தான் விரும்பினோம். 7-8 ஆட்டங்கள் பின்னடைவு கண்டு கடைசியில் இப்படி முடிப்பதில் வீரர்களைக் கண்டு பெருமையடைகிறேன்.

கிரிக்கெட்டை மகிழ்வுடன் ஆடாத ஓய்வறையில் நாம் இருக்க விரும்ப மாட்டோம். அடுத்த தொடருக்கான ஏலத்தை பிசிசிஐ எப்படி தீர்மானிக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்த அணி அமையும். மையமான வீரர்களை மாற்றி அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை கட்டமைக்க வேண்டும்.

ஐபிஎல் தொடங்கிய போது ஒரு அணியை உருவாக்கினோம் அது 10 ஆண்டுகள் சிறப்பாக சேவையாற்றினர். இனி அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டியதுதான். ரசிகர்களுக்கான செய்தி, நிச்சயம் வலுவாக அடுத்த தொடரில் மீண்டும் வருவோம். அப்படித்தான் நாங்கள் அறியப்பட்டுள்ளோம்.

அட்டவணையில் கடைசியில் உள்ளோம் 14 புள்ளிகள் எடுத்திருந்தால் தகுதி பெற்றிருக்கலாம். இந்த சீசனில் ஒரு அணி மட்டுமே நன்றாக ஆடியது (மும்பை), அல்லது பெரும்பாலான அணிகள் நன்றாக ஆடினர்.

ஜெர்சி கையெழுத்தினால் ரிட்டையர் ஆகிறேன் என்று நினைத்து விட்டனர். ருதுராஜ் எப்போதும் நன்றாக ஆடக்கூடிய வீரர். கோவிட் அவரை 20 நாட்கள் முடக்கியது. அவரை நாங்கள் கணிக்க நேரமில்லாமல் போய் விட்டது,அதனால்தான் ஃபாப் டுபிளெசி, வாட்சனை வைத்தே தொடங்கினோம். அது சரிவரவில்லை, கடைசியில் ருதுராஜ் அபாரமாக ஆடினார்.

இவ்வாறு கூறினார் தோனி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x