

இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்றுமுன்தினம் கான்பூரில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒரு கட்டத்தில் இந்தியா வெற்றிபெறும் நிலையில் இருந்தது. இதனால் தென் ஆப்ரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ் பந்து வீச்சை அடிக்கடி மாற்றியமைத்தார். மேலும், பந்து வீச்சாளர்களுக்கு அடிக்கடி ஆலோசனை கூறி வந்தார். இதனால் ஐ.சி.சி.யின் விதிப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் தென்ஆப்பிரிக்கா வீரர்கள் இரண்டு ஓவர்கள் குறைவாக வீசி யிருந்தனர்.
இதனால் கேப்டன் டி வில்லியர்ஸூக்கு போட்டியின் சம்பளத்தில் இருந்து 40 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு 20 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது. இன்னும் 12 மாதத்திற்குள் இது போன்று ஓவர்கள் குறைவாக வீசிய சர்ச்சையில் சிக்கினால் டி வில்லியர்ஸ் சஸ்பெண்ட் நடவடிக் கையை எதிர்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே, வங்காள தேசத்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டி வில்லியர்ஸூக்கு தடை விதிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.