Published : 30 Oct 2020 09:38 PM
Last Updated : 30 Oct 2020 09:38 PM

"1001"- டி20 கிரிக்கெட்டில் 1000 சிக்சர்கள் அடித்த அபூர்வ கிறிஸ் கெய்ல்- வரலாறு படைத்தார்

டி20 கிரிக்கெட்டில் கிறிஸ் கெய்ல் சிக்சர்கள் சாதனையை உடைப்பது மிகமிகக் கடினம் என்பதற்கு ஏற்ப டி20 கிரிக்கெட்டில் இன்று தனது 1000 மாவது சிக்சரை அடித்து அதைக் கடந்து 1001 சிக்சர்களை அடித்து வரலாற்றுச் சாதனை படைத்தார்.

இன்றிலிருந்து அவரை ‘ஆயிரம் சிக்சர்கள் ‘வாங்கிய’ அபூர்வ கிறிஸ் கெய்ல்’ என்றே அழைக்கலாம்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் முக்கியமான ஐபிஎல் போட்டியில் அபுதாபியில் ஆடி வருகின்றது. இதில் ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய ராகுல், மந்தீப் சிங் இறங்கினர், இதில் மந்தீப் சிங், ஆர்ச்சரின் பவுன்சருக்கு ஸ்டோக்ஸிடம் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். பயங்கர பவுன்சர் இது.

உடனே இறங்கி விட்டார் யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெய்ல் இறங்கியவுடன் வருண் ஆரோனை புல் ஷாட்டில் சிக்ஸ் அடித்தார், ஆனால் அடுத்த பந்தே கெய்ல் கொடியேற்ற பராகும், உத்தப்பாவும் டீப்பில் புரிதல் இல்லாமல் பராக் கேட்சை விட நேர்ந்தது இதன் பலனை அனுபவித்தார் கிறிஸ் கெய்ல்.

ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அடுத்த சிக்ஸ் பிறகு 11வது ஓவரிலும் 13வது ஓவரிலும் திவேத்தியாவை 2 சிக்சர்கள் விளாசினார்.

பிறகு 18வது ஓவரை ஸ்டோக்ஸ் வீச டீப் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ் அடிக்க அது 999வது சிக்சராக அமைந்தது. அடுத்ததாக கார்த்திக் தியாகி ஓவரில் பெரிய லெக் திசை பவுண்டரியில் அவரது குயிக் பவுன்சரை சிக்சருக்குத் தூக்கி ஆயிரம் சிக்ஸ் அடித்த அபூர்வ சிந்தாமணியானார் கிறிஸ் கெய்ல், அளப்பரிய சாதனை. 1001வது சாதனையாக ஆர்ச்சரின் புல்டாஸை தூக்கி சிக்ஸ் விளாசினார். இது 1001வது சிக்ஸ். கடைசியில் அதே ஆர்ச்சர் ஓவரில் யார்க்கர் லெந்த் பந்தில் கால்காப்பில் வாங்கி பவுல்டு ஆனார் கிறிஸ் கெய்ல் 99 ரன்களில் சதமெடுக்காமல் அவுட் ஆன கடுப்பில் மட்டையை வீசி எறிந்தார். ஆனால் உடனேயே சுதாரித்து ஆர்ச்சரின் கையை பாசத்தோடு தட்டி பாராட்டி விட்டுச் சென்றார் யுனிவர்ஸ் பாஸ். 63 பந்துகளில் 6 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் அதில் 1001வது சிக்சர் சதனையுடன் 99 ரன்களில் ஆட்டமிழந்தார் கெய்ல்.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 185/4. 1001 சிக்சர்களுக்கு அடித்த கெய்லுக்கு அடுத்த இடதில் கெய்ரன் பொலார்ட் 690 சிக்சர்களுடன் இருக்கிறார். கெய்ல் சாதனையை உடைக்க நீண்ட நீண்ட காலமாகும் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x