Published : 29 Oct 2020 08:18 AM
Last Updated : 29 Oct 2020 08:18 AM

வார்னருக்கு ‘சிக்னல்’ கொடுத்து உதவினாரா நடுவர் அனில் சவுதாரி- கிளம்பிய சர்ச்சை

விதிமுறைகளின் படி கேப்டன் என்பவர் தன்னிச்சையாக மேல்முறையீடு முடிவை எடுக்க வேண்டுமே தவிர நடுவரிடமே கேட்கக் கூடாது.

அக்.27 அன்று துபாயில் சன் ரைசர்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி கண்டது.

இந்தப் போட்டியில் நடுவர் பணியில் இருந்த 2 நடுவர்களில் ஒருவர் அனில் சவுதாரி. ஒரு முக்கியமான அவுட் தீர்ப்பு விவகாரத்தில் டேவிட் வார்னர் மூன்றாம் நடுவர் அதவாது டி.ஆர்.எஸ். ரிவியூ செல்ல வேண்டாம் என்று சிக்னல் கொடுத்ததாக சர்ச்சை எழுந்தது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி விரட்டும் போது 17வது ஓவரில் சந்தீப் சர்மா வீசிய ஃபுல் லெந்த் பந்தை அஸ்வின் லெக் திசையில் பிளிக் செய்ய முயன்றார். பந்து கால்காப்பைத் தாக்கியது. முறையீடு செய்ய நடுவர் அனில் சவுதாரி நாட் அவுட் என்றார்.

வார்னர் டி.ஆர்.எஸ் ரிவியூ போகலாம் என்று பரிசீலித்துக் கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் அனில் சவுதாரி பந்து பேட்டில் பட்டது எனவே எல்.பி. கிடையாது என்பதை சிக்னல் செய்தார். இதனால் வார்னர் டிஆர்எஸ் வேண்டாம் என்று தன் முடிவை மாற்றிக்கொண்டார்.

ஆனால் போட்டி அப்போது ஏற்கெனவே செத்து விட்டது, டெல்லி தோல்வி உறுதியாகி விட்டதால் இது ஒரு பெரிய விஷயமல்ல.

டி.ஆர்.எஸ் இல்லாத போது நடுவர்கள் பவுலரோ கேப்டனோ என் அவுட் இல்லை என்று கேட்டால் இப்படி சிக்னல் செய்யலாம், ஆனால் டி.ஆர்.எஸ் வந்த பிறகு செய்யக் கூடாது.

ஆனால் நடுவர் அனில் சவுதாரி இதனை ஞாபகம் இல்லாமல் செய்திருக்கலாம். இருப்பினும் அவர் ஒருதரப்பாகச் செயல்பட்டாரா என்று சர்ச்சை கிளம்பியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x