நீங்கள் ஒரு வேஷதாரி ரவி சாஸ்திரி: நெட்டிசன்கள் பாய்ச்சல்

நீங்கள் ஒரு வேஷதாரி ரவி சாஸ்திரி: நெட்டிசன்கள் பாய்ச்சல்
Updated on
1 min read

விருத்திமான் சஹா நேற்று அதிரடி இன்னிங்சை ஆடி 45பந்துகளில் 87 ரன்களை விளாசியதையடுத்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அவரைப் புகழ்ந்து, “உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பருக்கு, தனித்துவமான ஆட்டம் அசத்தி விட்டீர்கள்” என்ற தொனியில் ட்வீட் செய்து பாராட்டியிருந்தார்.

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அறிவிக்கப்பட்ட டி20, ஒருநாள் அணியில் சஹாவுக்கு இடம் வழங்கவில்லை டெஸ்ட் அணியில் சஹாவுடன் சேர்த்து ரிஷப் பந்த்துக்கும் இடம் கிடைத்துள்ளது.

இதனையடுத்து ரவிசாஸ்திரியை நெட்டிசன்கள் கடுமையாகக் கலாய்த்து வருகின்றனர். உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் என்று எப்படி சொல்கிறீர்கள் என்று சிலரும், இன்னும் சிலர் உலகின் சிறந்த விக்கெட் கீப்பரை டி20, ஒருநாள் அணிகளில் தேர்வு செய்ய மாட்டீர்களா என்றும் நெட்டிசன்கள் கடுமையாக ரவிசாஸ்திரியை விமர்சித்து வருகின்றனர்.

சச்சின் இஸ் லைஃப் என்ற பெயருடைய ட்விட்டர்வாசி, ’என்னாது! உலகின் சிறந்த விக்கெட் கீப்பரா?’ என்று கடும் சிரிப்பு இமோஜியை பதிவிட்டு வடிவேலு ஜோக் ஒன்றின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

பராஸ் கோத்தாரி என்பவர், ‘தெரிகிறதல்லவா, டி20, ஒருநாள் அணியிலும் தேர்வு செய்யலாமே’ என்று பதிவிட்டுள்ளார்.

சோஹம் மெய்ட்டி என்பவர், “தோனியின் சிறந்த மாற்று வீரர் ரிஷப் பந்த் தான் என்று நீங்கள்தான் சொன்னீர்கள், வேறு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் தேவையில்லை என்றீர்கள், நீங்கள் ஒரு வேஷதாரி, இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க தகுதியற்றவர் நீங்கள்” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

இன்னொரு பயனாளர், ‘நீங்கள் அவரை ஆஸி.யில் பெஞ்சில் அமர வைத்து விட்டு ரிஷப் பந்த்தைத்தான் பயன்படுத்துவீர்கள், அதுதான் சஹாவின் விதி’ என்று சாடியுள்ளார்.

நிஷாந்த் என்ற பயனாளர், ‘ஹேங் ஓவரிலிருந்து மீண்டு வாருங்கள் ரவி பாய்’என்று பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in