விளையாட்டாய் சில கதைகள்: பனிக்காலத்தால் உருவான கூடைப்பந்து

விளையாட்டாய் சில கதைகள்: பனிக்காலத்தால் உருவான கூடைப்பந்து
Updated on
1 min read

கனடா நாட்டில் பிறந்து 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உடற்கல்வி ஆசிரியராக இருந்தவர் ஜேம்ஸ் நிஸ்மித். ஸ்பிரிங்ஃபீல்ட் என்ற கல்லூரியில் பணியாற்றிய அவர், தன்னிடம் படிக்கும் மாணவர்கள் தினமும் விளையாட்டுகளில் ஈடுபட்டு உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

பனிக்காலங்களின்போது வெளியில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவதால், மாணவர்கள் விளையாடுவதற்கு மைதானத்துக்கு வராமல் இருந்தனர். இப்படியே இருந்தால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுமே என்று கவலைப்பட்டார் நிஸ்மித். இந்நிலையில் மாணவர்கள் உள் அரங்கிலேயே ஆடும் வகையில் அவர் உருவாக்கிய விளையாட்டுதான் கூடைப்பந்து.

ஒரு கூடையை எடுத்து, அதன் அடிப்பாகத்தை வெட்டியவர், அதை கல்லூரி விடுதியின் பால்கனியில் மாட்டினார். அந்த கூடைக்குள் துல்லியமாக பந்தை நுழைக்கும் வீரர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார். காலப்போக்கில் மாணவர்களுக்கு இதில் ஆர்வம் வர, அதை 2 அணிகள் ஆடும் ஆட்டமாக மாற்றியுள்ளார் நிஸ்மித். இதற்காக செவ்வக வடிவில் ஒரு மைதானத்தை அமைத்து அதன் 2 புறங்களிலும் தலா ஒரு கூடையைத் தொங்கவிட்டார். மைதானத்தில் மோதும் 2 அணிகளும், எதிரணியின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைக்குச் சென்று அங்குள்ள கூடைக்குள் பந்தை போடுவதை இலக்காக கொண்ட ஆட்டமாக கூடைப்பந்து விளையாட்டை உருவாக்கினார். இதன் படி 1891-ம் ஆண்டில் ஸ்பிரிங்ஃபீல்ட் கல்லூரியில் முதல் முறையாக கூடைப்பந்து விளையாடப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in