சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா ஜோடி

சீன ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் சானியா ஜோடி
Updated on
1 min read

சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தி யாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர் லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி யது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டி யில் நேற்று நடந்த காலிறுதியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி 7-6 (5), 6-4 என்ற நேர் செட்களில் ஜெர்மனி யின் ஜூலியா ஜார்ஜஸ்-கரோலினா பிளிஸ்கோவா ஜோடியைத் தோற் கடித்தது.

போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சானியா-ஹிங்கிஸ் ஜோடி முதல் செட்டில் கடும் சவாலை சந்தித்தது. எனினும் விடாப்பிடியாக போராடிய அந்த ஜோடி டைபிரேக்கர் வரை சென்று அந்த செட்டை கைப்பற்றியது. எனினும் 2-வது செட்டில் சானியா-ஹிங்கிஸ் ஜோடியின் ஆட்டத்துக்கு எதிர் ஜோடியால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் எளிதாகக் கைப்பற்றிய சானியா-ஹிங்கிஸ் ஜோடி, போட்டியை 1 மணி நேரம், 20 நிமிடங்களில் முடிவுக்கு கொண்டு வந்தது.

சீன ஓபனில் கடந்த 3 ஆண்டுகளும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள சானியா மிர்சா, 2013-ல் இங்கு ஜிம்பாப்வேயின் காரா பிளாக்குடன் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

போபண்ணா ஜோடி தோல்வி

ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-அமெரிக்காவின் ஜான் இஸ்னர் ஜோடி 4-6, 3-6 என்ற நேர் செட்களில் உருகுவேயின் பாப்லோ கியூவாஸ்-செர்பியாவின் விக்டர் டிராய்க்கி ஜோடியிடம் தோல்வி கண்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in