இளம் வீரர்களும் ஏமாற்றினர்; போல்ட், பும்ராவிடம் சிஎஸ்கே 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது 

இளம் வீரர்களும் ஏமாற்றினர்; போல்ட், பும்ராவிடம் சிஎஸ்கே 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது 
Updated on
1 min read

ஷார்ஜாவில் சற்றுமுன் தொடங்கிய ஐபிஎல் 2020-ன் 41வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பொறுப்பு கேப்டன் பொலார்டினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட தோனியின் சிஎஸ்கே அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் முதல் ஓவரில் 5வது பந்தில் போல்ட்டின் ஸ்விங்குக்கு எல்.பி.ஆகி வெளியேறினார். பொலார்ட் ரிவியூ செய்ததில் பிளம்ப் என்று தெரிந்தது.

அம்பதி ராயுடுவை 3 ஷார்ட் பிட்ச் பந்துகள் மூலம் படுத்தி எடுத்தார் பும்ரா, கடைசியில் 4வது ஷார்ட் பிட்ச் பந்து இடது தோளுக்கு வர புல் ஷாட் ஆட முயன்று லெக் திசைப் பந்துக்கு டி காக்கிடம் கெட்ச் ஆகி 2 ரன்களில் வெளியேறினார்.

அடுத்த பந்தே நாராயண் ஜெகதீசன் பும்ரா வேகத்தில் கால்கள் நகராமல் 2வது ஸ்லிப்பில் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். டுபிளெசிஸ் அடுத்ததாக போல்ட் ஓவரில் வைடு ஆஃப் ஸ்டம்ப் பந்தை அடிக்கப் பார்த்தார் மெல்லிய எட்ஜ், டி காக் கேட்ச் எடுக்க வெளியேறினார். 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை திணறி வருகிறது.

சற்றுமுன் 7 ரன்கள் எடுத்த ஜடேஜா, போல்ட் பந்தில் நேராக மிட்விக்கெட்டில் கேட்ச் ஆகி வெளியேற சிஎஸ்கே 5.2 ஓவர்களில் 21/5. தோனி 2 பவுண்டரியில் ஒரு எட்ஜ் பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார். சாம் கரண் இறங்கியுள்ளார்.

போல்ட் 3 ரன்களுக்கு 3 விக்கெட், பும்ரா 2 ஓவர் 16 ரன்கள் 2 விக்கெட்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in