சிராஜை பந்து வீச அழைத்த விராட் கோலி ‘சபாஷ்!’ இது சரி.. சைனியை 3வது ஓவரில் ஏன் வீச அழைத்தார்?: குழம்பிய கம்பீர்

சிராஜை பந்து வீச அழைத்த விராட் கோலி ‘சபாஷ்!’ இது சரி.. சைனியை 3வது ஓவரில் ஏன் வீச அழைத்தார்?: குழம்பிய கம்பீர்
Updated on
1 min read

கேகேஆர் அணியை நொறுக்கிய நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலியின் சமயோசித கேப்டன்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

பொதுவாக ஆர்சிபி அணியில் தொடக்கத்தில் தமிழக ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர்தான் வீசுவார், ஏனெனில் பவர் ப்ளேயில் அவரை விட சிறந்த பவுலர் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை யாரும் இல்லை என்பதே.

ஆனால் நேற்று கேகேஆர் அணிக்கு எதிராக ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பந்தை முகமது சிராஜ்ஜிடம் கொடுத்தார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது, ஏனெனில் கடந்த ஐபிஎல் போட்டித் தொடரில் சிராஜ் சொதப்பி நெட்டிசன்களிடம் சிக்கி வகையாக வறுபட்டதே காரணம்.

ஆனால் நேற்று ஒரே ஒவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு 4 ஓவர்களில் 2 மெய்டன்களை வீசி புதிய ஐபிஎல் சாதனை படைத்தார். அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார், பேன்ட்டன் இறங்கி ஹாட்ரிக் பந்தை தடுத்தாடினார்.

ஆனால் கோலி என்ன செய்தார் என்றால் முதல் ஓவரை கிறிஸ் மோரிஸ் வீசிய பிறகு, 2வது ஓவர் சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். 3வது ஓவர் மோரிஸிடம் தானே கொடுக்க வேண்டும், ஆனால் சைனியிடம் கொடுத்தார். இது கம்பீர் போன்றவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

விராட் கோலியைப் புகழ்ந்தாலும் கம்பீர் 3வது ஓவரில் சைனியை பந்து வீச அழைத்ததன் காரணம் என்னவென்று புரியவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பாக கம்பீர் கூறியதாவது:

“முகமது சிராஜிடம் பந்தைக் கொடுத்து பவுலிங் செய்யச் சொல்லி விராட் கோலி அபாரமான கேப்டன்சியை வெளிப்படுத்தினார் சபாஷ்! பாசிட்டிவ் ஆன கேப்டன்சி, மிக அருமையான காய் நகர்த்தல் அது பலனளித்தது, இது எனக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்தியது.

முதல் ஓவரை கிறிஸ் மோரிஸ் வீசினா,ர் 2வது ஓவரில் சிராஜ் 2 விக்கெட், மீண்டும் மோரிஸ்தானே வீச வேண்டும், ஏன் சைனியை விராட் கோலி கொண்டு வந்தார், இதற்கான காரணம் எனக்குப் புரியவில்லை.” என்றார் கம்பீர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in