வாரிய தலைவர் அணியுடன் தென் ஆப்பிரிக்கா மோதும் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்

வாரிய தலைவர் அணியுடன் தென் ஆப்பிரிக்கா மோதும் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்
Updated on
1 min read

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி 20 தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து அணி இந்தியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் மோத உள்ளது. முதல் டெஸ்ட் நவம்பர் 5ம்தேதி மொகாலியில் தொடங்குகிறது.

2வது டெஸ்ட் 14ம் தேதி பெங்களூ ருவிலும், 3வது டெஸ்ட் 25ம் தேதி நாக்பூரிலும், கடைசி மற்றும் 4வது டெஸ்ட் டிசம்பர் 3ம் தேதி டெல்லியிலும் நடைபெறுகிறது. இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா அணி, வாரிய தலைவர் அணியுடன் 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் மோத உள்ளது.

இந்த பயிற்சி ஆட்டம் மும்பை யில் இன்று தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா அணி ஆம்லா தலைமையிலும் வாரிய தலைவர் அணி சேதஷ்வர் புஜாரா தலைமையிலும் களமிறங்குகிறது.

தென் ஆப்பிரிக்கா அணி:

ஆம்லா(கேப்டன்), டி வில்லியர்ஸ், டுபிளெஸ்ஸி, டுமினி, டீன் எல்கார், டெம்பா பவ்மா, சைமன் ஹார்மர், இம்ரன் தகிர், மோர்ன் மோர்கல், பில்லாந்தர், டேன் பைட், ரபாடா, ஸ்டெயின், டேன் விலாஸ், ஸ்டியான் வான்சைல்.

வாரிய தலைவர் அணி:

சேதஷ்வர் புஜாரா (கேகப்டன்), கேக.எல்.ராகுல், உன்முக்த் சந்த், கருண் நாயர், ஷ்ரேயாஸ் ஐயர், நமன் ஓஜா, ஹார்டிக் பாண்டியா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், ஷ்ரதுல் தாக்குர், ஷெல்டான் ஜாக்சன், கரண் சர்மா, நேது சிங்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in