Published : 20 Oct 2020 02:02 PM
Last Updated : 20 Oct 2020 02:02 PM

மற்ற ஆட்டங்களின் முடிவையும், எங்கள் பார்ம் மாற்றத்தையும் நம்பியிருப்பதால் நம்பிக்கையுடன் இருப்பது கடினம்: ஸ்டீபன் பிளெமிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்ததன் மூலம் ஐபிஎல் 2020-யின் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவது மிகமிக கடினமாகியுள்ளது.

தோனியும் இதனை ஒப்புக்கொண்டு ’நாங்கள் அந்த இடத்தில் இல்லை’ என்று பேட்டியளித்தார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் அணியின் நிலைப்பற்றி கூறும்போது, “மிகவும் மனமுடைந்த நிலையில்தான் உள்ளோம். இரண்டு நெருக்கமான போட்டிகளில் ஆடினோம், ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நாங்கள் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டோம்.

இந்தப் போட்டியில் வென்று தொடரில் உயிர்ப்புடன் இருக்கவே விரும்பினோம், ஆனால் இப்போது எங்கள் அணியின் பார்மிலும் மாற்றம் தேவைப்படுகிறது, மற்ற ஆட்டங்களின் முடிவை நம்பியும் இருக்க வேண்டியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் எப்படி பாசிட்டிவ் ஆக இருக்க முடியும்.

என்ன பிரச்சினை என்பதைக் களைய எப்போதும் நாங்கள் முயற்சி செய்கிறோம் ஆனால் எதுவும் நமக்குச் சாதகமாகச் செல்லவில்லை எனும்போது கடினமே.

அதனால்தான் வழிமுறை எனும் புரோசஸ் என்பதைப் பார்த்து அதில் தவறு இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். அல்லது எங்களால் சரியாக களத்தில் செயல்பட முடியவில்லையா என்பதையும் பார்க்க வேண்டும். வழிமுறைகளின் துணை விளைவுதான் ஆட்டத்தின் முடிவு என்பது.

தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தோம். பாசிட்டிவ் ஆக ஆடி ஒரு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும். ஆட்டம் முழுதும் உண்மையான உத்வேகம் கிடைக்கவில்லை. ராஜஸ்தான் நன்றாக வீசினர்.

அட்டவணையைப் பாருங்கள், எங்கள் அணி சாரத்தை இழந்திருக்கிறது. வயதான அணியினரை வைத்துக் கொண்டு 3வது ஆண்டும் தொடர்வது கடினம் தான். துபாயும் எங்களிடம் புதிய அணுகுமுறையை கோருகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x