Published : 20 Oct 2020 10:59 AM
Last Updated : 20 Oct 2020 10:59 AM

என் மட்டை விளிம்பில் பட்ட சப்தம் எனக்குக் கேட்கவில்லை.. ஜோஸ் பட்லர்தான் சொன்னார்: டக் அவுட்டிலிருந்து பிழைத்த எல்.பி.ரிவியூ பற்றி ஸ்டீவ் ஸ்மித்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்று துல்லியத் தாக்குதல் என்பார்களே அதே போல் சிஎஸ்கேவை துல்லியத்தாக்குதலில் முறியடித்தது.

சிஎஸ்கே அணி எந்தவிதச் சவாலுமின்றை சரணடைந்தது. ராஜஸ்தான் பந்து வீச்சுக்கு 125 ரன்களையே எடுத்தது சிஎஸ்கே, பதிலுக்கு சிஎஸ்கே பந்துவீச்சை பட்லர், ஸ்மித் வெளுத்துக் கட்டினர். குறிப்பாக பட்லர் 48 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழந்தார். 17.3 ஓவர்களில் ஆட்டம் முடிந்தது. சிஎஸ்கே கதையும் முடிந்தது.

எப்போதும் தோற்றுக்கொண்டே இருக்கும் போது தோனி செய்வதறியாது திகைப்பதை பார்த்திருக்கிறோம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் அவர் கேப்டன்சியில் ஆடும்போது தோனியின் கேப்டன்சி கடுப்பேற்றுவதாக இருக்கும். இப்போதும் அந்த நிலையே நீடிக்கிறது.

ராஜஸ்தான் அணி இலக்கைத் துரத்தும் போது ஸ்டீவ் ஸ்மித் 6வது ஓவரை எதிர்கொண்டார். சக வீரர் ஹேசில்வுட் வீசிய குட்லெந்த் இன்ஸ்விங்கருக்கு வழக்கம் போல் ஆஃப் திசையில் நகர்ந்து ஆடும் முயற்சியில் கால்காப்பில் வாங்கியதாக ஒரு பலத்த முறையீடு எழுந்தது. மிடில் ஸ்டம்ப் நேராக வாங்கினார்.

நடுவர் நாட் அவுட் என்றார், தோனி ரிவியூ வேண்டாம் என்றார் பிறகு ரிவியூ செய்தார். அதில் ஸ்மித் மட்டையின் அடர்த்தியான உள் விளிம்பில் பட்டுச் சென்றது ரீப்ளேயில் தெரிந்த்து. தப்பினார் ஸ்டீவ் ஸ்மித். அப்போது ஸ்மித் டக்கில் இருந்தார்.

இது தொடர்பாக ஆட்டம் முடிந்து பேட்டியளித்த ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, “இல்லை, நான் எட்ஜ் செய்தேன் என்று நினைக்கவில்லை, எனக்கு எட்ஜ் செய்ததாகத் தெரியவில்லை, ஆனால் ரிவியூவில் எட்ஜ் காட்டியது. நான் அதை உணரவில்லை. பட்லர்தான் சொன்னார் எட்ஜ் என்று, பீல்டர்கள் சிலரும் எட்ஜ் ஆனதைக் கேட்டதாக ஜோஸ் தெரிவித்தார், எனக்குத் தெரியவில்லை. விசித்திரமான ஆட்டம், ஆனாலும் வெற்றி பெற்றது அருமையே” என்றார் ஸ்மித்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x