Published : 17 Oct 2020 09:17 AM
Last Updated : 17 Oct 2020 09:17 AM

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் ஓய்வு பெற்றார்: 2008-ல் கொல்கத்தாவுக்காக ஐபிஎல் தொடரில் ஆடியவர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

36 வயதாகும் உமர் குல் தேசிய டி20 கோப்பைப் போட்டியான, ராவல்பிண்டியில் நடைபெற்ற சதர்ன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். உமர் குல் பலுசிஸ்தான் அணிக்கு ஆடினார், இவர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

இவர் பாகிஸ்தானுக்காக 2003ம் ஆண்டு அறிமுகமானார். இதுவரை அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலும் 427 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

130 ஒருநாள் போட்டிகளில் 179 விக்கெட்டுகளையும் 47 டெஸ்ட் போட்டிகளில் 163 விக்கெட்டுகளையும், 60 டி20 சர்வதேசப் போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

மொத்தமாக 125 முதல் தரப்போட்டிகளில் 479 விக்கெட்டுகளையும் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 286 விக்கெட்டுகளையும் டி20-யில் 222 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற வேகப்பந்து ஜீனியஸ்கள் தங்கள் கரியரின் கடைசி கட்டத்தில் இருந்த போது உமர் குல் நுழைந்தார். சீராகவும் துல்லியமாகவும் வீசக்கூடியவர். யார்க்கர்களில் வல்லவர், இன்ஸ்விங்கிங் யார்க்கர்கள் மூலம் பல பேட்ஸ்மென்களின் பாதங்களை அச்சுறுத்தியுள்ளார்.

2007-ல் எம்.எஸ். தோனி தலைமையில் இந்தியா டி20 உலகக்கோப்பையை பாகிஸ்தானை இறுதியில் வீழ்த்தி வென்ற போது, அந்தத் தொடரில் உமர் குல் 13 விக்கெட்டுகளுடன் அதிகவிக்கெட்டுகளைக் கைப்பற்றியவராகத் திகழ்ந்தார்.

2008-ல் உமர் குல் ஐபிஎல் அணியான கொல்கத்தாவுக்கு விளையாடி 6 போட்டிகளில் 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைகளற்ற மிகவும் அமைதியான வீரர், களத்தில் நல்ல நடத்தையையும் நட்பையும் வெளிப்படுத்தும் வீரர். 2016-ல் இங்கிலாந்துக்கு எதிராக கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடினார் குல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x