

நேற்று ஷார்ஜாவில் நடந்த டி20 போட்டியில் ராகுல், அகர்வால், கெய்ல் கூட்டணி விராட் கோலி தலைமை ஆர்சிபி அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இதில் கேப்டன் விராட் கோலி சில தவறுகளைச் செய்தார், இதில் பெருந்தவறு ஏ.பி.டிவில்லியர்ஸை இறக்காமல் அடுத்தடுத்து வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபேயை இறக்கினார். ஏபி டிவில்லியர்ஸ் 6ம் நிலையில் இறக்கப்பட்டு சோபிக்காமல் ஷமியிடம் ஆட்டமிழந்தார்.
இது கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. ஆனால் சேவாக் ஒவ்வொரு போட்டியையும் தனக்கேயுரிய பாணியில் கிண்டலும் கேலியுடனும் வீடியோ ரிவியூ செய்து வருகிறார். நேற்றைய போட்டி குறித்த சேவாகின் கிண்டலில் விராட் கோலியை நிஜத்தில் விகே என்று அழைக்கப்படுவாராம். அதே பெயரில் உள்ள பாலிவுட் படத்தின் கேரக்டரைக் குறிப்பிட்டு சேவாக், ‘நான் விகே, பெங்களூரு கேப்டன். நான் இந்த பூமியைச் சேர்ந்தவன் அல்ல. நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையத் தவிர வேறில்லை. நான் இன்று குழம்பியுள்ளேன், நான் என்ன தவறு செய்தேன். டி20-யின் சிறந்த பேட்ஸ்மெனை இறக்கவில்லை என்று என்னை குற்றம்சாட்டுகிறார்கள்’ என்று வீடியோவை படுகிண்டலாக ஆரம்பித்து குரல் ஏற்ற இறக்கங்களுடன் செம கிண்டலாக ரிவியூ செய்தார்.
“டாஸ் வென்று முதல் 4 ஓவர்கள் படிக்கால், பிஞ்ச் நல்ல தொடக்கம் கொடுத்தனர். பிறகு அர்ஷ்தீப் படிக்காலை அவுட் செய்தார், பிறகு முருகன் அஸ்வின் பிஞ்ச்சை வெளியேற்றினார். அப்போதுதான் முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் நைட் வாட்ச்மேனை தரிசித்தேன். அனைவரும் ஏ.பி.டிவில்லியர்ஸ் இறங்கப் போகிறார் என்று ஆவலுடன் பார்த்த போது வாஷிங்டன் சுந்தர் இறங்கினார். என்ன ஒரு மூவ்! நைட் வாட்ச்மேனும் ஆட்டமிழந்தார், சரி இப்போதாவது ஏபிடி இறங்குவார் என்று பார்த்தால் துபே இறங்கினார்.
ஏபிடி ஓய்வறை ஏ/சி-யை எஞ்ஜாய் செய்து கொண்டிருந்தார். விடுதியில் ஏ/சி சரியில்லை போலும். கடைசியில் ஏபிடி இறங்கினார், அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஷமி, கோலி, ஏபிடியை வீழ்த்தினார்” என்று செம கிண்டலாக ரிவியூ செய்துள்ளார் சேவாக்.