Published : 13 Oct 2020 08:37 AM
Last Updated : 13 Oct 2020 08:37 AM

ஒரு ‘சூப்பர்ஹியூமன்’ தவிர, அனைத்து பேட்ஸ்மென்களுமே திணறினர்: ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு பாராட்டுகளை அள்ளி வீசிய விராட் கோலி

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியை தன் மட்டை வீச்சினால் மட்டுமே அடித்து நொறுக்கினார் ஏ.பி.டிவில்லியர்ஸ். பிட்ச் மந்தமான நிலையில் பேட்ஸ்மென்கள் ரன்கள் எடுக்க திணறும் நிலையில் உண்மையில் அதிமனிதனாக அதிவீரராக ஏபிடி-யை மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 33 பந்துகளில் 73 ரன்கள், கடைசி 5 ஒவர்களில் 80-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டது.

உலகின் சிறந்த பேட்ஸ்மெனான கோலியே ஒரு பவுண்டரிதான் அடிக்க முடிந்தது. 194/2 என்று ஸ்கோரை எங்கோ கொண்டு சென்றார் டிவில்லியர்ஸ் தொடர்ந்து ஆடிய கொல்கத்தா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், மோரிஸ் ஆகியோரிடம் 12 ரன்களுக்கு மடிந்தது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்குப் பேசிய விராட் கோலி, “மூன்றரை வார பயிற்சி முகாம் உதவியது. பவுல்லிங் பயிர்சியாளர் வீரர்களுடன் கடினமாக உழைத்தார்.

களத்தில் இறங்கியவுடன் என்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாக அறிந்திருக்கிறோம். பிளான் ஏ தோல்வியடைந்தாலும் பிளான் பி எப்போதும் கைவசம் உள்ளது.

இது அனைத்துமே மனநிலையையும் உடல் மொழியையும், தீவிரத்தையும் பொறுத்தது. இப்போது மனநிலை பாசிட்டிவ் ஆக உள்ளது.

இந்த வெற்றி வலுவான அணிக்கு எதிரான அருமையான வெற்றி, கிறிஸ் மோரிஸ் வருகையினால் பவுலிங் பலமடைந்துள்ளது. பிட்ச் வறாண்டு கிடந்தது, பனி இல்லை, நாள் அருமையாக இருந்தது.

ஏபி.டிவில்லியர்ஸ் எனும் ஒரேயொரு ‘சூப்பர்ஹியூமன்’ தவிர மற்ற பேட்ஸ்மென்கள் அனைவரும் இங்கு திணறினர். 165 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதே எங்கள் பேச்சாக இருந்தது, ஆனால் 195 எடுத்தோம், எப்படி, ஏன் என்பது உங்களுக்கே தெரியும். அந்த அடி நம்ப முடியவில்லை.

ஏபிடி இறங்கினார் 3வது பந்தை அடித்தார், நல்லபடியாக உணர்வதாக அவர் தெரிவித்தார். இப்படி ஏபி டிவில்லியர்ஸ் மட்டுமே ஆட முடியும் அவருக்கே உரித்தான ஆட்டம் இது. விலைமதிப்பற்ற இன்னிங்ஸ் இது. 160-165 தான் எதிர்நோக்கினோம், 195 என்பது டிவில்லியர்ஸின் ஜீனியஸினால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது.

கூட்டணியில் உறுதுணையாக ஆடியதில் எனக்கு மகிழ்ச்சியே. எதிர்முனையில் இருந்து ஏபிடியை ரசித்தேன். அவரது ஆட்டத்தை ரசிக்க அதுவே சிறந்த இடம்” என்றார் விராட் கோலி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x