அமெரிக்க ஓபன்: பயஸ், போபண்ணா வெற்றி பெற்று முன்னேற்றம்

அமெரிக்க ஓபன்: பயஸ், போபண்ணா வெற்றி பெற்று முன்னேற்றம்
Updated on
1 min read

அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் கலப்பு இரட்டையரில் பயஸும், ஆடவர் இரட்டையரில் போபண்ணாவும் முதல் சுற்றில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

கலப்பு இரட்டையரில் லியாண்டர் பயஸ்-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி அமெரிக்காவின் டெய்லர் ஹாரி பிரிட்ஸ்- சிலூய் ஜோடியை 6-2, 6-2 என்று எளிதில் வென்றனர்.

இந்த ஆட்டம் 46 நிமிடங்களில் முடிந்தது.

ஆடவர் இரட்டையரில் இந்திய-ருமேனிய இணையான ரோஹன் போபண்ணா-புளோரின் மெர்ஜிய ஜோடி அமெரிக்க ஜோடியான ஆஸ்டின் கிராஜிசெக், நிகலஸ் மன்ரோ இணையை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

சுமார் 1 மணி நேரம் 7 நிமிடங்களில் போபண்ணா ஜோடி வெற்றி கண்டது.

அடுத்த சுற்றில் போபண்ணா-மெர்ஜிய ஜோடி போலந்து-மெக்சிகோ இணையான ஃபிர்ஸ்டன்பர்க்-சாண்டியாகோ கொன்சாலஸ் ஜோடியை எதிர்கொள்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in