

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தரின்டு கவுஷல், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தூஸ்ரா பந்து வீசுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
இது தொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கவுஷலின் பந்துவீச்சு குறித்து சென்னையில் உள்ள ஐசிசி ஆய் வகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் அவர் தூஸ்ரா பந்து வீசுவது விதிமுறைக்கு புறம்பாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதனால் தூஸ்ரா வீச அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் வழக்கம்போல் ஆப் பிரேக் வீசலாம்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.