184 ரன்கள் போதாது என்றே நினைத்தோம், ஆனால் பிட்ச் வித்தியாசமாக மாறிவிட்டது: ஸ்ரேயஸ் அய்யர்

184 ரன்கள் போதாது என்றே நினைத்தோம், ஆனால் பிட்ச் வித்தியாசமாக மாறிவிட்டது: ஸ்ரேயஸ் அய்யர்
Updated on
1 min read

ஷார்ஜா மைதானம் சிறிய மைதானம் என்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 184 ரன்கள் போதாது என்றே கருதினோம் என்று டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் தெரிவித்துள்ளார்.

ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 138 ரன்களுக்கு மடிந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது டெல்லி அணிக்கு நெட் ரன் ரேட்ட்டில் பெரிய சாதகப் பலன்களை ஏற்படுத்த, ராயல்ஸ் அணி 7ம் இடத்துக்குச் சரிந்தது.

இந்நிலையில் ஸ்ரேயஸ் அய்யர் கூறியதாவது:

உண்மையில் பந்து வீச்சு பிரமாதம். ரன்கள் போதுமானதாக இல்லை என்றே நினைத்தோம். ஆனால் பிட்ச் மாறிவிட்டது, பந்துகள் நின்று வந்தன, பவுலர்களும் திட்டங்களைச் சரியாக செயல்படுத்தினர்.

பனிப்பொழிவினால் நாங்களும் முதலில் பவுலிங் செய்யவேநினைத்தோம் நல்ல வேளையாக இந்த மேட்சில் இது எங்களுக்குச் சாதகமாக அமைந்தது.

பனிப்பொழிவில் பந்துகள் உண்மையில் மட்டைக்கு நன்றாக வரும் என்றே நினைத்தோம் ஆனால் பிட்ச் ஸ்லோவாகி விட்டது.

நான் கேப்டன்சியை நேயத்துடன் செய்கிறேன். வீரர்கள் கேப்டன்சியை எளிதாக்குகின்றனர். குறிப்பாக பவுலர்கள். உதவிப்பணியாளர்கள் அணி கூட்டத்தை நிர்வகிப்பது கூட பாராட்டத்தக்க விதத்தில் உள்ளது.

இதே உத்வேகத்தை கடைசி வரை பராமரிப்போம் என்று நம்புகிறோம், என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in