நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு எதிரானவராக இருக்கிறீர்கள் கம்பீர்?- உசுப்பேற்றிய நெட்டிசன்

நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு எதிரானவராக இருக்கிறீர்கள் கம்பீர்?- உசுப்பேற்றிய நெட்டிசன்
Updated on
1 min read

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீரிடம் நெட்டிசன் ஒருவர் நீங்கள் ஏன் பாகிஸ்தான் எதிரியாக இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்ப அதற்கு கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்

கரோனா வைரஸ் வந்தாலும் வந்தது, கவுண்டமணி ஒருபடத்தில் சொல்வாரே, ‘இந்தத் தொழிலதிபர் தொல்லை தாங்க முடியலைடா சாமி’ என்று, அது போல் இந்தப் பிரபலங்கள் அதுவும் சினிமா, கிரிக்கெட் துறைகளின் பிரபலங்கள் சமூக ஊடகங்களில் கொடுக்கும் தொல்லை தாங்க முடீலடா சாமி என்று நாமும் கூற வேண்டும் போல் உள்ளது.

கம்பீர் தன் சமூக ஊடகத்தில், ‘என்னிடம் எது வேண்டுமானலும் கேளுங்கள்’ (ஆஸ்க் மீ எனிதிங்) என்று ஒரு உரையாடல் அமர்வைத் தொடங்கினார்.

அதில் ஒரு பயனாளர், ‘நீங்கள் ஏன் பாகிஸ்தான் எதிரியாக இருக்கிறீர்கள் கம்பீர்?’ என்று உசுப்பேற்றினார் .

இதற்குப் பதில் அளித்த கம்பீர், “நான் பாக். எதிரியல்ல, எந்த ஒரு இந்தியரும் கூட பாகிஸ்தானுக்கு எதிரியல்ல. ஆனால் எங்கள் ராணுவ வீரர்களின் உயிரா அல்லது வேறு ஏதாவதா என்று வரும்போது நாங்கள் அனைவரும் ஒரே பக்கம் தான் இருப்போம்” என்று அவருக்குப் பதில் அளித்தார்.

ட்விட்டரில் கம்பீரிடம் கேள்வி கேட்ட அந்த ட்விட்டர் கணக்காளரின் பெயர் ஜமீன் சித்திக்கி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in