ஐபிஎல் தொடரில் இடம்பெற்ற அமெரிக்க வேகப்பந்துவீச்சாளர் விலகல்: சன்ரைசர்ஸ் அணியின் புதிய வேகப்பந்துவீச்சாளர் பிரித்விராஜ் யாரா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் அலி கான் : படம் உதவி | ட்விட்டர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் அலி கான் : படம் உதவி | ட்விட்டர்.
Updated on
1 min read


ஐக்கிய அரபு அமீரகத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் அலி கான் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏற்கெனவே இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஹாரி குர்னேவைத்தை ஏலத்தில் எடுத்திருந்தது. அவர் காயத்தால் விலகியதால், அமெரிக்காவின் அலி கானை கொல்கத்தா அணி தேர்வு செய்தது. ஆனால், அலி கானும் துரதிர்ஷ்டவசமாக காயத்தால் அவதிப்படுவதால், அவரும் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

29 வயதான அலி கான், கரிபியன் லீக் டி20 தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் சிறப்பாகப் பந்துவீசனார். இதனால், பொலார்ட், ரஸல் ஏற்பாட்டின் பெயரில் கொல்கத்தா அணிக்கு அலி கான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் காயத்தால் விலகியுள்ளார். பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கர் அலி கான் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த பிரித்விராஜ் யாரா?

இதேபோல சன்ரைசர்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் கால் மற்றும் இடுப்பு வலி காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். புவனேஷ்வர் குமார் இல்லாதது சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்துவரும் போட்டிகளில் பெரும் பின்னடைவாகத்தான் இருக்கும்.

இருப்பினும், புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக ஆந்திராவைச் சேர்ந்த வேகப்பந்துவீ்ச்சாளர் பிரித்விராஜ் யாரா சேர்க்கப்பட்டுள்ளார். 21 வயதாகும் பிரித்விராஜ் யாரா, இடதுகை வேகப்பந்துவீச்சாளர். கடந்த 2017-18 ரஞ்சி தொடரில் தமிழகத்துக்கு எதிராக களமிறங்கிய யாரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் யாரா விளையாடியுள்ளார்.

கடந்த ஆண்டு இரு போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய யாரா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். சராசரியாக 145 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சமாக 150 கி.மீ. வேககத்திலும் பந்துவீசும் திறமை படைத்தவர் யாரா. ஆஸி.யின் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஜான்ஸனை கனவு நாயகனாகக் கொண்டுள்ள யாராவுக்கு, ஆர்சிபியின் கேப்டன் கோலியின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பதுதான் இலக்காம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in