Last Updated : 01 Sep, 2015 09:57 AM

 

Published : 01 Sep 2015 09:57 AM
Last Updated : 01 Sep 2015 09:57 AM

வாசிம் அக்ரம் கார் மீது துப்பாக்கியால் சுட்டவர் மன்னிப்பு கோரினார்

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கார் மீது துப்பாக்கி சூடு நடத்திய ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார்.

பாகிஸ்தானின் கராச்சியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் களுக்கு பயிற்சியளித்து வரும் வாசிம் அக்ரம், கடந்த மாதம் பயிற்சியை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு கார், வாசிம் அக்ரம் கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. அதனால் கடும் கோபமடைந்த வாசிம் அக்ரம், அந்தக் காரை துரத்திச் சென்று மடக்கி அதன் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது வாக்குவாதம் முற்றவே, காரின் பின் இருக்கை யில் இருந்த மற்றொருவர் வாசிம் அக்ரமை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதிர்ஷ்டவமாக வாசிம் அக்ரமுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவருடைய கார் மீது குண்டு பாய்ந்தது.

இதையடுத்து வாசிம் அக்ரம் போலீஸில் புகார் செய்தார். அவருடைய கார் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மேஜர் அமிருல் ரெஹ்மான் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதன்பிறகு வாசிம் அக்ரமை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கிய ரெஹ்மான், இப்போது நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். தவறான புரிதல் காரணமாக துப்பாக்கி சுடுதல் சம்பவம் நடந்துவிட்டதாகக் கூறி அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது மிக மோசமான சம்பவம் ஆகும். நானும், எனது குடும்பத்தினரும் வாசிம் அக்ரமின் மிகப்பெரிய ரசிகர்கள். அவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக எனது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து எனக்கு எதிர்ப்பு கிளம் பியது. அக்ரம் இந்த நாட்டின் ஹீரோ. இந்த நாட்டுக்கு பல் வேறு பெருமைகளை சேர்த்தவர் எனவும் ரஹ்மான் தெரிவித்துள் ளார். ரெஹ்மான் இந்த பிரச்சி னையை முடிவுக்கு கொண்டு வரு வதற்காக அக்ரமின் நெருங்கிய நண்பர்கள் சிலரை அணுகி யுள்ளார். அப்போது ஊடகங்கள் மூலம் ரெஹ்மான் மன்னிப்பு கோரினால் மட்டுமே இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என அக்ரம் கூறியுள்ளார். அதன்பேரிலேயே இப்போது ரெஹ்மான் மன்னிப்பு கோரியுள்ளார் என அக்ரமுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x