

உள்ளூர் டி-20 போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்க்க முடியாமல் விரக்தி அடைந்துள்ள பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.
சயீத் அஜ்மல் பந்து வீசும் முறையும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. அவரால் தனது பந்து வீசும் முறையை முழுமையாக மாற்றிக் கொள்ள முடியவில்லை.
‘அவருக்கு எப்போதும் கதவுகள் திறந்தே இருக்கும். ஏராளமான உள்ளூர் போட்டிகளில் அவர் திறமையை நிரூபிக்கலாம்’ என பாகிஸ்தான் தேர்வுக் குழுவின் தலைவர் ஹரூன் ரஷீத் தெரிவித்துள்ளார்.