

கடந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் ஹாக்கி போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, பாகிஸ்தான் வீரர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டனர். இன்றுவரை அதற்கு எழுத்துப்பூர்வமாகவோ, வாய்மொழியாகவோ பாகிஸ்தான் வீரர்களோ, அணி நிர்வாகமோ மன்னிப்புக் கேட்கவில்லை.
அவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும் என ஹாக்கி இந்தியா தலைவர் நரிந்தர் பத்ரா நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
“இப்போது இந்த அறிக்கைக்கான தேவை என்ன? ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்காமல் இருப்பதற்கான சாக்குப்போக்குதான் இது.
இதற்கு, அடுத்து நடக்கும் போட்டியில் எங்கள் வீரர்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்” என பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் சஹான்ஸ் ஷேக் தெரிவித்துள்ளார்.