சிஎஸ்கே தோல்விக்கு ஸ்டீபன் பிளெமிங் கூறும் காரணங்கள்: ஓவர் த்ரோ, பீல்டிங், டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பல்

சிஎஸ்கே தோல்விக்கு ஸ்டீபன் பிளெமிங் கூறும் காரணங்கள்: ஓவர் த்ரோ, பீல்டிங், டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பல்
Updated on
1 min read

சன் ரைசர்ஸ் அணியிடம் சிஎஸ்கே அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. சன் ரைசர்ஸ் அணி 15 ஓவர்கள் முடிவில் 100/4 என்றுதான் இருந்தது, கடைசியில் அபிஷேக் சர்மா, பிரியம் கார்க் கூட்டணியின் பங்களிப்பினாலும் சிஎஸ்கேவின் பவுலிங், பீல்டிங் சொதப்பலினாலும் 164/5 என்ற இலக்கை எட்டியது.

ஓவர் த்ரோக்கள், 2 கேட்ச்கள் நழுவவிடப்பட்டது, நோ-பாலில் ஒரு கேட்ச் என்று சிஎஸ்கே அணி தொழில்நேர்த்தியில்லாமல் ஆடியது தோல்விக்குக் காரணமாக அமைந்தது என்று தோனியே கூறுகிறார்.

இந்நிலையில் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறும்போது, “கொஞ்சம் தளர்வாக செயல்பட்டோம். கடைசி 4 ஓவர்கள் சன் ரைசர்ஸ் அபாரமாக ஆடினார்கள், நாங்கள் சரியாக ஆடவில்லை. பீல்டில் தன்னம்பிக்கையுடன் இல்லை.

ஓவர் த்ரோக்களில் டஜன் ரன்கள் கொடுத்திருப்போம். நெருக்கமான போட்டியில் இத்தகைய தவறுகளுக்கு நாம் விலை கொடுக்க வேண்டி வரும். இன்னும் வீரர்கள் ரிதமுக்கு வரவில்லை. ஆனால் இவை விரைவில் மாறிவிடும். ஆனால் இந்தப் பிரச்சினைகளை நாம் சரியாகக் கையாளவில்லை எனில் சரிவு நிச்சயம்.

தேவைப்படும் ரன் விகிதத்துக்கு ஏற்ப ரன்கள் எடுக்காதது பிரச்சினைதான். இந்த தொடரை வெல்ல வேண்டுமெனில் டாப் ஆர்டர் நன்றாக ஆடுவது அவசியம். அவர்களை ஆதரிக்கிறோம். 4வது ஆட்டம்தான் முடிந்திருக்கிறது, எனவே மீண்டும் ரிதம், பார்மில் வருவதற்கு தொடரில் இடமுள்ளது.

ஆனால் அழுத்தத்தில் இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. நான் சொல்வதை விட அணி அழுத்தத்தில் இருக்கிறது என்றே கூறுவேன்” என்றார் ஸ்டீபன் பிளெமிங்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in