2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: மே.இ.தீவுகள் தகுதி பெறவில்லை

2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: மே.இ.தீவுகள் தகுதி பெறவில்லை
Updated on
1 min read

2017-ம் ஆண்டு நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் ஒருநாள் போட்டித் தொடருக்கு மேற்கிந்திய அணி தகுதி பெறவில்லை. வங்கதேச அணி தகுதி பெற்றது.

இங்கிலாந்தில் 2017 ஜூன் 1 முதல் 18 வரை நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறும் 8 அணிகளை ஐசிசி உறுதி செய்தது.

இதில் 2006-ம் ஆண்டுக்குப் பிறகு வங்கதேச அணி தகுதி பெற்றுள்ளது. டாப்-8-லிருந்து மே.இ.தீவுகள் வெளியேறியதால் சாம்பியன்ஸ் டிராபிக்குத் தகுதி பெறவில்லை.

2015 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வெளியேற்றி வங்கதேசம் காலிறுதிக்கு தகுதி பெற்றதிலிருந்து அந்த அணி ஒருநாள் போட்டிகளில் கடுமையாக மேம்பாடு அடைந்து ஆட்கொள்ளப்பட வேண்டிய ஒரு சக்தியாக எழுச்சி பெற்றுள்ளது.

2017 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகள் விவரம்: ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் வங்கதேசம்.

முதலில் பாகிஸ்தான் பங்கேற்பதே கடினம் என்றே தெரிந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தரவரிசையில் 9-ம் இடத்துக்கு தாழ்ந்த பாகிஸ்தான் அதன் பிறகு ஜிம்பாப்வே, இலங்கை அணிகளுக்கு எதிராக இழந்த மரியாதையை மீட்டதால் சாம்பியன்ஸ் டிராபிக்குத் தகுதி பெற்றது.

மே.இ.தீவுகள் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் மொத்தம் 15 போட்டிகள் நடைபெறும். 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, பிரிவு அளவிலான போட்டிகளில் அந்தந்தப் பிரிவில் டாப் 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கு இது சோகமான ஒரு தினமாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in