Published : 29 Sep 2020 11:36 AM
Last Updated : 29 Sep 2020 11:36 AM

ஆதாயம் தரும் இரட்டைப்பதவியாவது..ஒன்றாவது... உதவுவது என் உரிமை: கங்குலி திட்டவட்டம்

சமீபத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், சவுவர் கங்குலியின் ஆலோசனைகள் உதவியாக இருந்தன என்று கூறியது சர்ச்சையானது.

அதெப்படி பிசிசிஐ தலைவர் அணிக்கு ஆலோசனை வழங்க முடியும், இது பதவியை துஷ்பிரயோகம் செய்வது, ஆதாயம் தரும் இரட்டைப்பதவி விவகாரம் என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்திய அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டன் கங்குலி 113 டெஸ்ட், 311 ஒரு நாள் போட்டிகல் 400 போட்டிகளுக்கும் மேல் பங்கேற்றுள்ளார்.

2019-ல் ஐபிஎல் அணியின் ஆலோசகராக இருந்தார் பிறகு பிசிசிஐ தலைவரானார், இதனால் ஆலோசகர் பதவியைத் துறந்தார்.

இந்நிலையில் கங்குலி கூறியதாவது:

ஸ்ரேயாஸுக்கு கடந்த ஆண்டு உதவி செய்தேன். நான் பிசிசிஐ தலைவராக இருக்கலாம். ஆனால் இந்தியாவுக்காக கிட்டத்தட்ட 500 போட்டிகளில் ஆடியுள்ளேன் என்பதை மறந்துவிடக் கூடாது.

இதனால் இளம் வீரர்களிடம் பேசுவேன், ஆலோசனைகள் வழங்குவேன். அவர்கள் வளர்ச்சிக்கு என்ன வேண்டுமோ அந்த ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்குவேன்.

அது ஸ்ரேயாசாக இருந்தாலும் சரி, கோலியாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு உதவி தேவையென்றால் நான் செய்வேன், அதற்குத்தான் இங்கு இருக்கிறேன். உதவுவதற்கான உரிமை எனக்கு உள்ளது, என்றார் கங்குலி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x