Last Updated : 25 Sep, 2015 09:46 AM

 

Published : 25 Sep 2015 09:46 AM
Last Updated : 25 Sep 2015 09:46 AM

பாட்மிண்டன் தரவரிசை: 25-வது இடத்தில் அஜய் ஜெய்ராம், முதலிடத்தில் நீடிக்கிறார் சாய்னா

பாட்மிண்டன் உலக தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் அஜய் ஜெய்ராம் 7 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

உலக பேட்மிண்டன் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜய் ஜெய்ராம் 25-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கொரிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி 2-வது இடம் பிடித்ததன் மூலம் ஜெய்ராம் முதல் 25 இடங்களுக்குள் வந்துள்ளார். மேலும், நடப்பாண்டு நடைபெற்ற ரஷிய ஓபன், ஸ்விஸ் ஓபன், மலேசிய மாஸ்டர் தொடர்களில் அரையிறுதி வரை முன்னேறினார். இவை அனைத்துமே கிராண்ட் பிரீ போட்டிகளாகும்.

அதேசமயம், இந்தியாவின் கே. காந்த், பாருபள்ளி காஸ்யப் ஆகியோர் தங்களின் இடங்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இருவரும் முறையே 5, 8-வது இடங்களில் உள்ளன.

ஹெச்.எஸ். பிரன்னாய் ஓர் இடம் பின்தங்கி 16-வது இடத்தைப் பிடித்துள்ளார். மகளிர் ஒற்றையரில் இந்தியாவின் சாய்னா முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். மற்றொரு வீராங்கனை பி.வி. சிந்து 13-வது இடத்தில் உள்ளார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா- அஸ்வினி பொன்னப்பா ஜோடி 11-வது இடத்தில் நீடிக்கிறது. ஆடவர் இரட்டையரில் மனு அத்ரி, பி. சுமீத் ரெட்டி ஜோடி 19-வது இடத்தில் உள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவிலிருந்து முதல் 25-வது இடங்களுக்குள் எந்த ஜோடியும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x