

இந்த ஐபிஎல் தொடரில் அன்று சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கிய போதே ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தீர்க்கதரிசியாகக் கூறினார், ‘சஞ்சு பேட்டிங்கில் மிகப்பெரிய ஐபிஎல் தொடரை எதிர்நோக்குகிறார்’ என்று.
அதுதன 2வது போட்டியிலும் நடந்தது 42 போட்டிகளி 85 ரன்களை வெளுத்து வாங்கினார், மீண்டும் ஸ்டாண்ட் அண்ட் டெலிவர் பாணியில் நின்ற இடத்திலிருந்து ஒரே தூக்கு பந்து மைதானத்துக்கு வெளியே போகிறதா பார் என்ற ரக ஆட்டத்தைக் காட்டினார்.
ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதுவரை 74 மற்றும் 85 என்று 159 ரன்களை 79.50 என்ற சராசரியில் நினைத்துப்பார்க்க முடியாத ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார்
இந்நிலையில் தன் ஆக்ரோஷம், தன் ஷாட்களின் பவர் எப்படி என்பதை அவர் விளக்கும் போது, “நான் கடந்த ஓராண்டாகவே பந்துகளை நன்றாக அடித்து வருகிறேன். அதையே ஒரு பழக்கமாக்குவதைத்தான் செய்து வருகிறேன். நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
சிலபல போட்டிகளை வென்று கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் கடினமாக முயன்றேன், ஆனால் எதுவும் நிகழவில்லை. நிறைய சோதித்தப் பிறகு ஆத்மபரிசோதனை செய்தேன். பிறகு கடினமாக உழைத்தேன்.
நான் என்ன சாதிக்க வேண்டும் என்று என்னையே கேட்டுக் கொண்டேன். என்னிடம் 10 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் உள்ளது, இந்த 10 ஆண்டுகளில் நான் கிரிக்கெட்டுக்காக அனைத்தையும் கொடுக்க வேண்டும் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்.
பவர் என்பது என் மரபணுக்களில் இருப்பது, என் தந்தையார் மிகவும் பலம் வாய்ந்த மனிதர்” என்றார் சஞ்சு சாம்சன்