

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 9வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 223 ரன்கள் குவித்தும் அணியின் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
ஒரு ஓவரில் திவேஷியா 5 சிக்சர்கள் விளாச காட்ரெல் 3 ஓவர்களில் 52 ரன்கள் விளாசப்பட்டார், ஷமி 4 ஓவர் 53 ரன்கள் கொடுத்தார். நீஷம் 4 ஓவர் 40 ரன்கள் என்று அடித்து நொறுக்கப்பட்டார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மொத்தத்தில் 18 சிக்சர்கள் அடித்தனர், கிங்ஸ்ல் வெவன் அணியில் மயங்க் அகரால் 50 பந்துகளில் 106 ரன்கள் எடுத்தார்.
தோல்வி குறித்து கிங்ஸ் லெவன் கேப்டன் கே.எல்.ராகுல் கூறும்போது, “இதுதான் டி20 கிரிக்கெட். இப்படி நிறைய முறை நடந்துள்ளது. நிறைய விஷயங்களைச் சரியாகத்தான் செய்தோம், ஆனால் ராஜஸ்தான் அணிக்கே பெருமை சேர வேண்டும். ஆட்டம் நம்மை எப்போதும் சாதாரணன் ஆக்கி விடும்.
இக்கட்ட்டான சூழ்நிலையில் பவுலர்கள் தவறிழைப்பது சகஜமே. மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்புவோம். ஒரேயொரு ஆட்டம் மோசமாகப் போனதில் ஒன்றுமில்லை, தொடரின் தொடக்கத்திலேயே இது நிகழ்ந்து விட்டதால் கவலையில்லை.
சிறிய மைதானம் எவ்வளவு ரன்கள் அடித்தோம் என்பதெல்லாம் மேட்டரே அல்ல. கடைசியில் பவுலர்கள் ரன்கள் கொடுக்கவே செய்வார்கள்” என்றார் ராகுல்.