பாட்டி இறந்த வருத்தத்திலும் சிஎஸ்கேவுக்காக ஆடிய வாட்சன்

பாட்டி இறந்த வருத்தத்திலும் சிஎஸ்கேவுக்காக ஆடிய வாட்சன்
Updated on
1 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்சன், தனது பாட்டி இறந்த வருத்தத்திலும் ஐபிஎல் லீக் போட்டியில் விளையாடி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

டெல்லி அணிக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணி தனது மோசமான ஆட்டத்தால் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இப்போட்டியில் வாட்சன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார்.

இந்த நிலையில் போட்டியன்று தனது பாட்டி இறந்து விட்டார் என்ற செய்தியை வாட்சன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வாட்சன் வெளியிட்ட வீடியோவில், ''நான் எனது அன்பை எனது குடும்பத்தினருக்கு வழங்க இருக்கிறேன். எனது தாயாருக்கு எனது பாட்டி சிறந்த அம்மாவாக இருந்தார். இந்த இக்கட்டான தருணத்தில் எனது குடும்பத்தினருடன் என்னால் இருக்க முடியாததற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன்'' என்று பேசினார்.

மேலும், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மறைவுக்கும் வாட்சன் வருத்தம் தெரிவித்தார்.

இதுகுறித்து வாட்சன் கூறும்போது, “அந்தச் சிறந்த மனிதர் நம்முடன் இல்லை என்பது என்னை உடைத்துவிட்டது. கடந்த நான்கு வருடங்களாக அவரை நான் அதிகம் தெரிந்துகொண்டேன். நான் இஸ்லாமாபாத் அணிக்காக விளையாடும்போது அவர் எனக்குப் பயிற்சியாளராக இருந்தார். நான் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியதை நிறுத்திக்கொண்ட பின்னர் நான் அவரைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in