Published : 26 Sep 2020 06:49 PM
Last Updated : 26 Sep 2020 06:49 PM

வீடியோவில் பார்த்ததைத்தான் சொன்னேன் : கவாஸ்கர்; எப்போதும் கவாஸ்கர் சாரை மதிக்க வேண்டும்: இர்பான் பதான்

விராட் கோலியின் தோல்விகளுக்கு அனுஷ்கா சர்மாவை இழுப்பதென்பது நெட்டிசன்களின் ஒரு மகா மோசமான பொழுதுபோக்காக இருக்கும் வேளையில் அன்று சுனில் கவாஸ்கர் ஆகாஷ் சோப்ராவுடன் வர்ணனையில் இருக்கும் போது, விராட் கோலி லாக் டவுன் போது எதிர்கொண்ட ஒரே பவுலிங் அனுஷ்கா சர்மாவின் பவுலிங்தான் என்று கூறினார்.

இது பெரிய சர்ச்சையாகி கவாஸ்கர் பாலின பேதம் பாராட்டுகிறார், அந்தரங்க வாழ்க்கையைப் பேசுகிறார், இது தவறு அவரை உடனடியாக வர்ணனைக்குழுவிலிருந்து நீக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன.

அனுஷ்கா சர்மாவும் கவாஸ்கர் என்னை ஏன் இழுக்க வேண்டும், கவாஸ்கர் விளக்கமளிக்க வேண்டுமென்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக கவாஸ்கர் விளக்கமளிக்கும் போது, ‘ரோஹித் சரியாக ஆடவில்லை, தோனி ஆடவில்லை, விராட் கோலியும் திணறினார். விராட் கோலிக்கும் பயிற்சி இல்லை, லாக் டவுன் சமயத்தில் அவர் அனுஷ்கா சர்மாவுடன் கிரிக்கெட் பயிற்சி செய்த வீடியொவை வெளியிட்டார் அதை முன் வைத்து அனுஷ்கா சர்மா பவுலிங்கைத்தான் கோலி ஆடியிருக்கிறார். அந்த ஒரு பவுலிங் ம்ட்டுமே கோலி எதிர்கொண்டார் என்று கூறினேன் வேறு வார்த்தை எதையும் பயன்படுத்தவில்லை.

அனுஷ்கா சர்மா கோலிக்கு பந்து வீசினார், அவ்வளவுதான். நான் எங்கு அவரை குற்றம்சாட்டினேன். நான் எங்கு இதில் பெண்பாலினத்தை இழிவு படுத்தினேன்? வீடியோவில் பார்த்ததைத்தான் சொன்னேன்” என்று அனுஷ்காவின் குற்றச்சாட்டை மறுத்தார்.

இந்நிலையில் அனுஷ்கா சர்மாவுக்கு அறிவுரை வழங்கும் விதமாக முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கூறும்போது, தன் ட்விட்டர்பக்கத்தில் ரத்தினச் சுருக்கமாக, “எப்போதும் சுனில் கவாஸ்கர் சாரை மதிக்க வேண்டும், எப்போதும்” என்று பதிவிட்டு இந்த விஷயத்தில் கவாஸ்கருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x