Published : 25 Sep 2020 17:53 pm

Updated : 25 Sep 2020 17:53 pm

 

Published : 25 Sep 2020 05:53 PM
Last Updated : 25 Sep 2020 05:53 PM

நினைவிருக்கிறதா? 2011 உலகக்கோப்பை பைனலில் தோனி அடித்து தொலைந்த பந்து 9 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு: பாராட்டு நடத்தி பெயர் சூட்ட முடிவு

ball-which-ms-dhoni-smashed-for-a-six-in-2011-world-cup-final-found
2011-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தோனி அடித்த சிக்ஸர் : கோப்புப்படம்

2011-ம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பைப் போட்டியை யாராலும் மறந்திருக்க முடியாது. தோனி தலைமையில் இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி மும்பை வான்கடே அரங்கில் இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையே இறுதி ஆட்டம் நடந்தது. இந்த ஆட்டத்தில் கடைசியில் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி பேசிய வார்த்தைகள் இன்னும் காதில் ரீங்காரமிடுகின்றன.

தோனி தன்னுடைய ஸ்டைலில் ஆட்டத்தை முடித்துவிட்டார். அருமையான சிக்ஸரைக் கூட்டத்தில் அடித்துள்ளார் என்று உரக்க ரவிசாஸ்திரி பேசினார். இலங்கை வீரர் குலசேகரா வீசிய பந்தில் கேப்டன் தோனி இமாலய சிக்ஸரை விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து, இந்திய அணிக்குக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்தார்.

அந்த ஆட்டத்தை யாராலும் மறந்திருக்க முடியாது. ஆனால், அந்தப் போட்டியில் தோனி கடைசியில் அடித்த சிக்ஸர் அடித்த பந்து காணாமல் போனது. அந்தப் பந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன அந்தப் பந்தைக் கண்டுபிடித்துத் தர முன்னாள் கேப்டன் சுனிஸ் கவாஸ்கர் மும்பை கிரிக்கெட் அமைப்புக்கு உதவ முன்வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வான்கடே அரங்கில் எந்தப் பகுதியில் பந்து விழுந்ததோ அந்தப் பகுதிக்கு தோனியின் பெயரை வைத்து, தோனியைக் கவுரவப்படுத்த மும்பை கிரிக்கெட் அமைப்பு முடிவு செய்துள்ளது.

அந்தப் பந்தை மும்பை கிரிக்கெட் அமைப்பு தேடி வந்த நிலையில், இறுதிப் போட்டியின்போது தோனி அடித்த பந்தை எடுத்துச் சென்ற பார்வையாளர் சுனிஸ் கவாஸ்கரின் நண்பர் ஆவார்.

தோனி அடித்த பந்து விழுந்த இடம் எம்சிஏ பெவிலியனில் 210-ம் எண் இருக்கையாகும். அந்தப் பந்தை எடுத்துச் சென்ற ரசிகரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். இதைத் தொடர்ந்து மும்பை கிரிக்கெட் அமைப்பின் உயர்மட்டக் குழு உறுப்பினர் அஜின்கயே நாயக், நிர்வாகக் குழுவுக்கு எழுதிய கடிதத்தில், வான்கடே மைதானத்தில் தோனியைப் பெருமைப்படுத்தும் வகையில் நிரந்தர இருக்கை ஒன்றை உருவாக்க வேண்டும்.

தோனி அடித்த பந்து விழுந்த இருக்கையை, தோனி இருக்கை என்று பெயர் மாற்றி அதற்கு வண்ணம் பூசிப் பாதுகாக்க வேண்டும். தோனியையும் கவுரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் தோனி அடித்த பந்தை எடுத்துச் சென்ற பார்வையாளர் சுனில் கவாஸ்கரின் நண்பர் என்பதை மும்பை கிரிக்கெட் அமைப்பு கண்டுபிடித்துவிட்டது. இதையடுத்து, கவாஸ்கரிடம் பேசி, அந்தப் பந்தைப் பெற்றுத் தருமாறு மும்பை கிரிக்கெட் அமைப்பு வேண்டுகோள் வைக்க உள்ளது.

அந்தப் போட்டியில் தோனி சிக்ஸர் அடித்த பந்தை எடுத்துச் சென்ற ரசிகர் தனது வீ்ட்டில் பந்தையும், அந்தப் போட்டியின் டிக்கெட்டையும் பாதுகாத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏறக்குறைய 9 ஆண்டுகளாக தோனி அடித்த பந்து தேடப்பட்டு வந்த நிலையில், இப்போதுதான் அது இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது.


தவறவிடாதீர்!

2011 World CupMS DhoniDhoni smashed for a sixMumbai Cricket AssociationDhoni’s iconic sixதோனி சிக்ஸர்மும்பை கிரிக்கெட் அமைப்பு2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டிஇலங்கை அணிகுலசேகராதோனியின் சிக்ஸர்9 ஆண்டுகளுக்குப்பின் பந்து கண்டுபிடிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author