ஷுப்மன் கில் பீல்டிங்கைப் பாராட்டிய சச்சின் மகள் சாரா!-எழும் ‘காதல்’ வதந்திகள்

ஷுப்மன் கில் பீல்டிங்கைப் பாராட்டிய சச்சின் மகள் சாரா!-எழும் ‘காதல்’ வதந்திகள்
Updated on
1 min read

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடுகிறார் ஷுப்மன் கில் (21), இவருக்கும் சச்சின் மகள் சாரா டெண்டுல்கருக்கும் இடையே நெருங்கிய நட்பு இருப்பதாக வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

புதனன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் பிரமாதமாக ஒரு பந்தைத் தடுத்தார். இதனை தனியே ரசித்த சச்சின் மகள் சாரா டெண்டுல்கர், ஷுப்மன் கில் பீல்டிங்கை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்

சூரியகுமார் யாதவ் அடித்த ஷாட்டை ஷுப்மன் கில் அபாரமாகத் தடுத்த வீடியோவை தன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்ட சாரா கூடவே இரண்டு இருதய இமோஜிக்களையும் இட்டுள்ளார். இதனால் இது வைரலாகியுள்ளது.

ஷுப்மன் கில் இடும் சமூக ஊடகப்பதிவுகளுக்கும் சாரா டெண்டுல்கர் வினையாற்றுவதும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இருவருக்கு இடையேயும் காதல் ஏற்பட்டுள்ளதாக வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in