

ஐபிஎல் 2020 தொடர் கரோனா காலத்தில் ஆடப்படுவதால் பார்வையாளர்கள் நேரில் வர இயலாமல் காலி மைதானத்தில் நடைபெறுவது என்பது அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கையை குறைக்கவில்லை என்று பிசிசிஐ செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஒலிபரப்பு நேயர்கள் ஆய்வு கவுன்சில் (Broadcast Audience Research Council- BARC) புள்ளி விவரத்தை மேற்கோள் காட்டி ஜெய் ஷா அதிகப் பார்வையாளர்களை ஐபிஎல் முதல் போட்டி ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெய் ஷா, மேற்கொண்ட ட்வீட்டில், “பார்க் தகவல்களின் படி, இதுவரை இல்லாத அளவில் சுமார் 20 கோடி பேர் ஐபிஎல் முதல் போட்டியை கண்டுகளித்துள்ளனர்.
இது எந்த ஒரு விளையாட்டு லீகின் முதல் நாள் பார்வையாளர்கள் எண்ணிக்கையை ஒப்பிடும் போது மிக அதிகம். எந்த ஒரு லீகும் உலகில் இத்தனைப் பெரிய பார்வையாளர்கள் எண்ணிக்கையைக் கொண்டிருக்கவில்லை” என்று ட்வீட் செய்துள்ளார்.
ட்ரீம் லெவன் ஐபிஎல் என்பதற்கு ஏற்ப இது ஒரு கனவுத்தொடக்கம்தான்.