Published : 22 Sep 2020 01:49 PM
Last Updated : 22 Sep 2020 01:49 PM

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோனிக்காகக் காத்திருக்கும் 3 ஐபிஎல் சாதனைகள்

இன்று இரவு 7.30 மணிக்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோனி தலைமை சிஎஸ்கே அணி எதிர்கொள்கிறது.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை தொழில் நேர்த்தியுடன் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்நிலையில் ஜோப்ரா ஆர்ச்சர் , வருண் ஆரோன், டாம் கரன், ஷ்ரேயஸ் கோபால் போன்ற பிரமாதமான பவுலர்களை சிஎஸ்கேவின் ‘டாடிஸ் ஆர்மி’எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்நிலையில் சாதனை மன்னன் தோனிக்காக 3 சாதனைகள் இன்று நிறைவேற்றப்பட காத்திருக்கிறது.

அவை, 1. எம்.எஸ்.தோனி இதுவரை 295 சிக்சர்களை அடித்துள்ளார். 5 சிக்சர்களை அடித்தால் 300 சிக்சர்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். இந்திய அணியில் ரோஹித் சர்மா 361 சிக்சர்களையும் சுரேஷ் ரெய்னா 311 சிக்சர்களையும் ஐபிஎல் தொடர்களில் அடித்துள்ளனர்.

2. தோனி தற்போது ஐபிஎல் தொடரில் விக்கெட் கீப்பர் மற்றும் கீப்பர் அல்லாமல் 100 கேட்ச்களை எடுத்துள்ளார். இன்னும் 3 கேட்ச்களை எடுத்தார் என்றால் சுரேஷ் ரெய்னாவின் 102 கேட்ச்கள் சாதனையை முறியடிப்பார்.

3. விக்கெட் கிப்பராக தோனி 96 கேட்ச்களை ஐபிஎல் கிரிக்கெட்டில் எடுத்துள்ளார். 4 கேட்ச்களைப் பிடித்தால் விக்கெட் கீப்பராக 100 கேட்ச்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். மேலும் ஒரு கேட்சை எடுத்தால் தினேஷ் கார்த்திக்கின் 101 கேட்ச்களை சமன் செய்வார்.

ஐபிஎல் தொடரில் 191 போட்டிகளில் தோனி 4432 ரன்களை எடுத்துள்ளார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 84. சராசரி 42.21, 23 அரைசதங்கள் எடுத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 137.77.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x