என் இன்னிங்ஸ் எனக்கே ஆச்சரியமளித்தது : ஏ.பி.டிவில்லியர்ஸ் வெளிப்படை

என் இன்னிங்ஸ் எனக்கே ஆச்சரியமளித்தது : ஏ.பி.டிவில்லியர்ஸ் வெளிப்படை
Updated on
1 min read

நேற்று ஆர்சிபி அணி சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்த முக்கியக் காரணிகளுள் ஒன்று ஏ.பி.டிவில்லியர்ஸின் கடைசிக் கட்ட அதிரடி என்றால் மிகையாகாது.

தொடக்கத்தில் அருமையாக இருந்த ஆர்சிபி அணி அதன் சாதக அம்சங்களை பயன்படுத்தவில்லை, நடுவே விராட் கோலி பவுண்டரி அடிக்க முடியாமல் திணறி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார், அதன் பிறகுதான் டிவில்லியர்ஸ் வெளுத்துக் கட்ட கடைசி 4 ஓவர்களில் 39 ரன்கள் விளாசப்பட்டது.

டிவில்லியர்ஸ் 30 பந்துகளில் 51 ரன்கள் விளாசினார்.

தனது இன்னிங்ஸ் பற்றி ஆட்டம் முடிந்தவுடன் டிவில்லியர்ஸ் கூறும்போது, “என் இன்னிங்ஸ் எனக்கே ஆச்சரியமளித்தது. நெருக்கமான போட்டியில் வெற்றியின் பக்கம் முடிந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வெற்றிக்காக கடினமாக உழைத்தோம். இது மிகப்பெரிய தொடக்கமாக எங்களுக்கு உள்ளது, இனிவரும் வெற்றிகளுக்கு முன்னோட்ட அறிகுறியே இது.

என் இன்னிங்ஸைப் பொறுத்தவரையில் எனக்கே ஆச்சரியம்தான். தென் ஆப்பிரிக்காவில் சவாலான போட்டியில் ஆடிவிட்டு வருகிறேன். அது எனக்கு நம்பிக்கையூட்டியது.

36 வயதாகி விட்டது, இங்கு வரும்போது அதிகம் கிரிக்கெட் ஆடியிருக்காத நிலையில் சில இளம் திறமைகளுக்கு மத்தியில் நான் ஆடியது மகிழ்ச்சியளிக்கிறது. அடிப்படைகள் நன்றாக இருந்தால் பிரச்சனைகள் இருக்காது.

படிக்காலின் அரைசதம் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவ்வளவு எளிதாக எட்ட முடியாததுதான். அவரது திறமை பிரமிப்பூட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் மூலம் 19-20 வயது இளம் வீரர்கள் வந்து ஆடி ஏதோ சர்வதேச கிரிக்கெட்டில் பல போட்டிகளை கண்டது போல் திறமையாக ஆடுவது ஆச்சரியமாகவே உள்ளது.” இவ்வாறு கூறினார் ஏ.பி.டிவில்லியர்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in