

ஐபிஎல் 2020 தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி செப்.23ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக தன் முதல் போட்டியில் களம் காண்கிறது.
இந்நிலையில் தினேஷ் கார்த்திக் தலைமையில் கொல்கத்தா வெற்றியுடன் தொடங்கவில்லை எனில் இவருக்குப் பதிலாக இங்கிலாந்தின் வெற்றி கேப்டன் மோர்கனை கேப்டனாக்கி விட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கேகேஆர் நன்றாக ஆடினர். ஆனால் திடீரென தோல்வி கண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. 5-ம் இடத்தில் முடிந்தது.
இந்நிலையில் ஸ்போர்ட்ஸ்தக் தொலைக்காட்சிக்கு கவாஸ்கர் கூறியதாவது:
கொல்கத்தா அணியிடம் நல்ல ஆக்ரோஷமான பேட்டிங் வரிசை உள்ளது. மோர்கன் சேர்க்கப்பட்டுள்ளது அந்த அணிக்கு கூடுதல் வலுவையும் அனுபவத்தையும் அளித்துள்ளது. அதனால் மோர்கன் அபாயகரமான வீரராகத் திகழ்வார்.
எனவே முதல் 4-5 போட்டிகளில் கொல்கத்தா சரியாக ஆடாமல் தோல்வியடைந்தால் தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக மோர்கனைக் கேப்டனாக்க வேண்டும், என்றார் சுனில் கவாஸ்கர்.
23ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை கேகேஆர் அணி அபுதாபி ஷேக் சையத் ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.