

தன்னை கழற்றிவிட்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக அஸ்வின் ஒரு ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார், ஆனால் தேவையில்லாமல் ஒரு சிங்கிளைத் தடுக்க டைவ் அடித்து தோள்பட்டையில் காயமடைந்து வெளியேறினார்.
இந்நிலையில் ஷ்ரேயஸ் அய்யர் கூறும்போது அஸ்வின் உடல் நலம் தேறி அடுத்த போட்டியில் ஆடுவார் என்று நம்புவதாக டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இந்நிலையில் ஷ்ரேயஸ் அய்யர் கூறும்போது, “நான் அஸ்வினிடம் காயம் பற்றி பேசினேன். அவர் என்னிடம் அடுத்த போட்டிக்கு தயாராகி விடுவதாகக் கூறினார்.
அஸ்வின் மனத்தளவில் உறுதியானவர் அதனால் அடுத்த போட்டியில் ஆடுவார் என்றே நம்புகிறேன், ஆனாலும் அணியின் ஃபிசியோதான் இறுதி முடிவை எடுப்பார், என்றார் அய்யர்.
அஸ்வின் முதலில் கருண் நாயர் விக்கெட்டை வீழ்த்தினார். பிறகு அதிரடி மே.இ.தீவுகள் வீரர் நிகோலஸ் பூரனை பவுல்டு செய்தார் அருமையான பந்து அது. அதன் பிறகுதான் பீல்டிங் செய்ய முயன்று டைவ் அடித்து எசகுபிசகாகக் காயம்பட்டுக் கொண்டார்.