2 பந்துகளில் 1 ரன் எடுத்தால் வெற்றி எனும்போதே வெற்றியைச் சாதித்திருக்க வேண்டும்: மயங்க் அகர்வால் வருத்தம்

மயங்க் அகர்வால்.
மயங்க் அகர்வால்.
Updated on
1 min read

துபாயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2020-ன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டி டை ஆகி பிறகு சூப்பர் ஓவரில் பஞ்சாப் சரியாக ஆடாமல் போக டெல்லி வென்றது.

உண்மையில் ஸ்டாய்னிஸ் தவிர டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ஒருவரும் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை, ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பந்த் ஆகிய அதிரடி வீரர்கள் கூட பவுண்டரி அடிக்க திணறினர்.

கிங்ஸ் லெவன் வெற்றி பெற 1 ரன் தேவை என்ற நிலையில் 2 பந்துகள் இருந்தன, ஆனால் ஸ்டாய்னிஸ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த ஆட்டம் ஸ்கோர் அளவில் நிகரன் ஆகி சூப்பர் ஓவரில் முடிவு செய்ய வேண்டியதாயிற்று. இதில் பஞ்சாப் சொதப்ப டெல்லி வெற்றி பெற்றுவிட்டது

இது தொடர்பாக இந்தப் போட்டியில் 60 பந்துகளில் 89 ரன்கள் அடித்த மயங்க் அகர்வால் வருத்தத்துடன் கூறும்போது, “மிகவும் கடினமான நாளாகி போனது. புதியப் பந்தில் அபாரமாக வீசினோம், உண்மையில் ஆட்டத்தை வெல்ல முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. அதுவும் நல்ல நிலையிலிருந்து விட்டு தோற்பதை ஏற்க முடியவில்லை.

இது முதல் ஆட்டம்தான். மீண்டும் வெற்றி வாய்ப்புகள் வரும். அடுத்தடுத்த போட்டிகளில் எப்படி ஆடுகிறோம் என்பதைப் பார்ப்போம்.

ஆனால் தொடரின் ஆரம்பத்திலேயே இப்படிப்பட்ட நெருக்கமான போட்டியை ஆடுவது பிரமாதமானது. இது மற்ற போட்டிகளின் சவால்களுக்கு நம்மை தயார்ப்படுத்தும்.

வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்படும் சமயத்தில் முடித்திருக்க வேண்டும், கண்டிப்பாக. ஸ்கோர் எடுக்கக் கூடியதுதான். புதிய பந்தில் அவர்களுக்கு விக்கெட் கொடுக்காம இருந்தால் நாம் வெற்றி பெற முடியும் என்றே நினைத்தோம்.

கடைசி நிலையை எட்டும்வரை பிரமாதமாக ஆடினோம், கடைசியில் என்னத்த சொல்வது?

ஸ்டாய்னிஸ் வெளுத்துக் கட்டினார் (21 பந்துகளி 53), சிறிய தவறு செய்தாலும் விளாசினார். பவுலிங்கிலும் கடைசியில் பிரமாதப்படுத்தினார்” என்றார் அகர்வால்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in