'திரும்பவும் எங்களை நீ தொடக்கூடாது': பேட்ட படத்தின் வசனத்தை கூறி சிஎஸ்கே வெற்றியை கொண்டாடிய இம்ரான் தாஹிர்

சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர் : கோப்புப்படம்
சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர் : கோப்புப்படம்
Updated on
1 min read


ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நேற்று நடந்த 13-வது சீசன் ஐபிஎல் டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றதை பேட்ட படத்தின் வசனத்தை பதிவிட்டு சிஎஸ்கே வீரர் இம்ரான் தாஹிர் கொண்டாடியுள்ளார்.

13-வது ஐபிஎல்டி20 சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. அபுதாபியில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்தது.

Caption
Caption

கடந்த ஆண்டு சீசனில் 4 லீக் ஆட்டங்களிலும், அதற்கு முந்தைய ஆண்டில் ஒரு ஆட்டம் என தொடர்ந்து 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி தோல்வி கண்டிருந்தது. இதற்கு பழிதீர்்க்கும் விதமாக நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

அதுமட்டுமல்லாமல், சிஎஸ்கே அணிய கடந்த 3 ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தைச் சந்தித்து அதில் அனைத்திலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் விதத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணியை விமர்சிக்கும் வகையிலும் சிஎஸ்கே சுழற்பந்துவீச்சாளரும் தென் ஆப்பிரிக்க வீரருமான இம்ரான் தாஹிர் ட்வி்ட்டரில் ரஜினி காந்த்தின் பேட்ட படத்தின் வசனங்களை பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் “ திரும்பவும் நீ எங்களை(சிஎஸ்கே) தொட்டுரக் கூடாது. தொட்டுட்டா தொட்டவன நாங்க விட்டதே இல்லை. இப்ப தானே காளியோட ஆட்டமே ஆரம்பமாகி இருக்கு. இன்னும் நிறைய சிறப்பான தரமான சம்பவங்கள்! காத்துகிட்டு இருக்கு #எடுடா வண்டிய போடுடா விசில் “ எனப் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in