என்னால் அங்கு இல்லாமல் இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை: சிஎஸ்கேவுக்கு ரெய்னா வாழ்த்து

என்னால் அங்கு இல்லாமல் இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை: சிஎஸ்கேவுக்கு ரெய்னா வாழ்த்து
Updated on
1 min read

13-வது சீசன் ஐபிஎல் தொடரில் பங்கேற்காத சென்னை அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபு தாபி நகரில் 13-வது சீசன் ஐபிஎல் டி 20 தொடர் இன்று தொடங்க உள்ளது.

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த நிலையில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த நிலையில் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு எனது வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னால் இன்று அங்கு இல்லாமல் இருப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆனால், என்னுடைய வாழ்த்துகள் அனைத்தும் உங்களிடம் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த மாதம் 15-ம் தேதி ஓய்வுபெற்ற சுரேஷ் ரெய்னா, தனிப்பட்ட காரணங்களால், ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in